நவதானியங்கள்;
-------------------------
நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை இந்த ஒன்பது வகையான தானியங்களும் நவ தானியங்களாகும்.

இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கான சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.

அதற்கான காரணம் என்னவெனில் ஒன்பது நவக்கிரகங்களும் உரிய தானியங்களும் இதில் அடங்கியுள்ளது.நவக்கிரகத்தினால் ஏற்படும் தோசங்கள் நிவர்த்தியாகும்.இந்த தானியங்கள் செழித்து வளரக் கூடியது.இந்த பயிர்கள் பசுமையாக எப்படி இருக்கிறதோ அதேபோல் நம்முடைய வாழ்வும்,வளமும் குன்றாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே நவதானியங்களை பயன்படுத்துகிறோம்.

மேலும் இந்த தானியங்கள் உணவாக பயன்படுத்தினால் நல்ல உடல் நலமும்,நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.