மருதாணி பூசுவது ஏன்?
---------------------------------
இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது. அதில் எண்ணற்ற பயன்களுடன் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்திவந்தனர்.

மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்துள்ளது. மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.

மருதாணி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.தோல் சம்பந்தபட்ட நோய்கள்.பித்தவெடிப்பு,மனநோய்,ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண்,முடி கொட்டாமல் இருக்க,உடல் குளிர்ச்சிக்கு,தூக்கமின்மை,கால் ஆணி இப்படி பல விசயங்களுக்கு பயன்பாடாக இருக்கிறது.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கும், இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருதாணி, டாட்டூஸ் வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78 சதவீதம் அதிகமாக இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில் கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருதாணி ஒரு வகையில் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. மருதாணியில் உள்ள ரசாயனங்கள் இந்த நோய் தாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவது குறைவாக இருப்பதும் காரணம் என்று தெரிகிறது.இயற்கையான மருதாணியே நன்மையை கொடுக்ககூடியதாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends