பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
---------------------------------------------------------------
பொதுவாக பூஜையின் போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி சுற்றிப் போடுவது வழக்கம். அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும் புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய பாசிடிவ் சக்தி உருவாகிறது. அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது. கூடவே இறையருளையும் பெற முடிகிறது.


கற்பூரம் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. அதுபோல மனிதன் இறந்த பிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது. மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு.

கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.

மற்றுமொரு தத்துவத்தையும் கற்பூர ஆராதனை உணர்த்துகிறது. கோவில் மூலஸ்தானத்தின் கருவறையானது காற்று, ஒளி எளிதில் உட்புக முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கும். அதனால் அங்கு ஒருவிதமான இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.

நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடைபெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவனை நாம் காணலாம்.

இதேபோல் அலைபாயும் நம் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான். அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடி இருக்கும். அந்த இருள் அகன்றால்தான் நம் உள் மனதில் உள்ள இறைவனைக் காண முடியும்.வாயால் ஊதித் தீபத்தை அணைப்பது குற்றமாகும். கற்பீர தீபம் எரியத் தொடங்கிய நேரம் முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends