முடி காணிக்கை கொடுப்பது ஏன் ?
-----------------------------------------------
முடிகாணிக்கை இறைவனுக்கு கொடுப்பது பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது.இதற்கு காரணமாக ஒரு புராணகதை சொல்லப்படுகிறது.

சோழ நாட்டில் சிவன் மேல் அதிக பக்தி கொண்டஏயர்கோன் கலிக்காமர் என்ற வீரர் வாழ்ந்து வந்தார்.அதே ப்[அகுதியில் வசித்த இன்னொரு சிவ பக்தர் மானக்கஞ்சாறர் மகளை மணக்க விரும்பினார்.அவரது மகள் தனக்கு மனைவியானால், தன் வாழ்க்கை இனிமையாக அமையுமென எண்ணினார். பெண் பார்க்கும் படலம் முடிந்து, முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டு விட்டது. மணநாள் அன்று, மணமகள் வீடுநோக்கி மணமகன் பவனி வந்து கொண்டிருந்தார். மணமகனை, எதிர்நோக்கிக் காத்திருந்தாள் மணப்பெண். அப்போது, ஒரு சிவனடியார் அங்கு வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதைத் தெரிந்து கொண்டார். அந்தப்பெண் அடியவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றாள். அவளது நீண்ட கூந்தலை நோட்டமிட்ட அந்தப் பெரியவர், இது எனக்கு வேண்டும் பஞ்சவடி (முடியால் செய்யப்படும் அகலமான பூணூல்) செய்ய பயன்படும்! என்றார். சிவனடியார்கள் கேட்பதை மறுக்காமல் கொடுத்துவிடும் குணமுள்ள மானக்கஞ்சாறர், மகளின் கூந்தலை மணநாள் என்றும் பாராமல், அரிந்து கொடுத்து விட்டார்.

அந்நேரம் வந்து சேர்ந்தார் மணமகன். கூந்தலற்று குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. சிவனடியாருக்காக தன் கூந்தலையே தியாகம் செய்தவள் இவள். மேலும், பெற்றவருக்கும் இவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட பக்தியுடையவள் தன் மனைவியாவதில் மிகுந்த மகிழ்ச்சியே என்று எண்ணினார்; திருமணம் சிறப்பாக முடிந்தது.பெண்ணுக்கே அழகு தரும் கூந்தலையே இறைவனுக்கு காணிக்கையாக அளித்தவள். இதன் அடிப்படையிலேயே, முடிகாணிக்கை கொடுக்கும் வழக்கம் பிரபலமானது.

இறைவனுக்கு முடிகாணிக்கையாக கொடுப்பதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது என சிலர் கருதலாம். உண்மையைச் சொல்லப்போனால் எளிமையை இது வலியுறுத்துகிறது. இறைவன் மனிதனிடம் எதையும் எதிர்பார்ப்ப தில்லை. இருந்தாலும், தனக்கு செய்த உதவிக்காக, மனிதன் தலைமுடியில் இருந்து தங்கம் வரை காணிக்கையாகக் கொடுக்கிறான். ஏழைகளால் தலைமுடியை மட்டுமே காணிக்கையாகத் தர முடிகிறது. இதை விற்கும் கோவில் நிர்வாகம் இந்தப் பணத்தை சுவாமியின் கணக்கில் சேர்க்கிறது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends