திருஷ்டி என்பது என்ன?
--------------------------------------
ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி.மனிதனின் கண்பார்வைக்க
தனித்த மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு.

கண் பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனின் மன நிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட முடியும் அல்லது சீ குலைத்துவிட முடியும்.
சித்தாகள், யோகிகள், ஞானிகள் இவாகளின் அருட்பார்வை பெற்ற ஒருவா மேன்மையடையலாம்.பொறாமை மிக்கவாகள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டுகண் பார்வை மூலமாகப் பிறா்க்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண் திருஷ்டி என்று கூறுவா்.

ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங்களும்,ஆசைகளும் உண்டு.அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு போராடுகிறான்.தன்னுடன் சமமான மனிதர் உயர்வடையும்பொழுது,சிலருக்க உயர்வடையும் மனிதரை பார்க்கும்பொழுது ஏக்கமாகவும்,பலருக்கு பொறாமையாகவும் எண்ணங்கள் தோன்றுகின்றன.நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டி ஆகும்.

ஒரு மனிதன் வாழ்வில் எந்த நிலையில் எப்படி வரவேண்டும் என்பது கடவுளால் தீர்மானிக்கப்பட்டதாகும்.இதை விதி என்றும் சொல்லலாம்.நல்ல எண்ணம்,அடுத்தவர் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவது.நல்ல பண்பு,தர்ம குணம்,தன்னை போல பிறரை எண்ணுவது இந்த குணநலன்கள் உள்ள நபரை திருஷ்டி ஒன்றும் செய்யாது.

மற்றவர்வகள் நம்மை நல்ல விதமாகவோ,தீய விதமாகவோ நினைக்கவேண்டும் என்பதை,நாம் தீர்மானிக்க முடியாது.ஆனால் நாம் மற்றவர்களை எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல்,பொறாமை கொள்ளாமல் நினைத்து,நம்முடைய செயலையும்,கடமையையும் செய்தாலே போதும்,நம்முடைய வளர்ச்சியை,எந்த கண் திருஷ்டியாலும் தடுக்க முடியாது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends