Announcement

Collapse
No announcement yet.

வெள்ளைப்பூண்டு, வேம்பு, கோமியம் நோய்க்கொ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெள்ளைப்பூண்டு, வேம்பு, கோமியம் நோய்க்கொ

    ஆமதாபாத்:மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, பசுவின் கோமியத்திலிருந்து கண்டுபிடித்துள்ள நோய்க்கொல்லி மருந்துக்கு, அமெரிக்கா காப்புரிமை வழங்கியுள்ளது. "இந்த மருந்து, நோய்களைக் கொல்வதுடன், நோய்களில் இருந்து பயிர்களைக் காக்கிறது' என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    "கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திரா' என்ற, நாக்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சுனில் மன்சிங்கா கூறியதாவது:
    எங்களின், "காமதேனு கிட்னியந்த்ரக்' என்ற பூச்சிக்கொல்லி மருந்து, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்வதுடன், வைரஸ், காளான், கிருமிகளையும் கொல்கிறது. பசு கோமியம், வேம்பு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்துக்கு, அமெரிக்கா காப்புரிமை வழங்கியுள்ளது.

    பூச்சிகளைக் கொல்வதுடன், மண்ணின் ஆரோக்கியத்தையும் இது மேம்பாடு அடையச் செய்யும். வீட்டிலேயே எளிதாக இதைத் தயாரிக்க முடியும். இதனால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ரசாயன உர உற்பத்தியை நிறுத்தவும் முடியும்.
    எங்களின், "காமதேனு ஆர்க்' என்ற நோய் எதிர்ப்பு மருந்துக்கு, அமெரிக்கா முன்னரே காப்புரிமை வழங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    source:http://www.dinamalar.com/news_detail.asp?id=805349
Working...
X