மக்கள் தொண்டு மகேசன் தொண்டு

பிறர்க்குச் செய்யும் உதவியே சுயநலனுக்காகத்தானா? மற்றும்
திருமூலர் சொன்ன பரோபகார மந்திரம்

இவ்வார தினமணி வெப்பில் திரு செங்கோட்டை ஸ்ரீராம்.
(பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!)

?"பத்தினியிடமும் பிள்ளையிடமும் மற்றவற்றிடமும் நாம் வைக்கிற பிரியத்துக்கெல்லாம் உண்மையில் நம்மிடமே உள்ள பிரியம்தான் காரணம். நம் உள்ள நிறைவுக்காகத்தான் மற்றவரிடம் பிரியம் காட்டுகிறோம்' என்று யாக்ஞவல்கிய உபநிஷத் உபதேசம் கூறுகிறது. அப்படிப் பார்த்தால், பர உபகாரம் என்பதை சுயநலம் என்றே எடுத்துக் கொள்ளலாமா?

* நேரடியாக நமக்கே நல்லது செய்து கொள்ள வேண்டும் என்று, பணத்தையும், இந்திரிய சுகங்களையும் தேடிப் போனால், இந்த உள் நிறைவு உண்டாக மாட்டேன் என்கிறது. மாறாக சுயகாரியங்கள் நிம்மதியின்மையிலும் துக்கத்திலுமே கொண்டு விடுகின்றன.

கண்ணாடியில் நமது முகத்தைப் பார்க்கிறோம். அதன் நெற்றியில் பொட்டில்லை என்று தெரிகிறது. உடனே கண்ணாடிக்குச் சாந்து இட்டால் என்ன ஆகும்? கண்ணாடி கறுப்பாகும். பிம்பத்துக்குப் பொட்டு வைப்பது என்றால், பிம்பத்தின் மூலமான மனிதனுக்குத்தான் பொட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.

"எனக்கு' என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் உண்மையில் நம் மனசுக்குக் கரிப்பொட்டு வைப்பதாகவே - நமக்கு நாமே கரியைப் பூசிக் கொள்வதாகவே முடிகிறது. மனசு என்கிற மாயக் கண்ணாடியில் பிரதிபலிக்கிற பரமாத்ம பிம்பத்தையே "நான்' என்று நினைக்கிறோம். அந்தப் பிம்பத்துக்கு அழகு செய்வது என்றால் உண்மையில் பரமாத்மாவுக்கு அழகு செய்ய வேண்டும்.

பரமாத்ம ஸ்வரூபமான லோகத்துக்கெல்லாம் செய்கிற சேவை இதனால்தான் நிறைவைத் தருகிறது. இதே மாதிரிதான் அந்தப் பரமாத்வையே பூஜிப்பதும், தனக்கு என்று வைத்துக் கொள்கிற கரிப்பொட்டு, இப்போதுதான் அலங்கார திலகமாகிறது.

மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்பது சரியா என்பதற்கு பரமாச்சாரியர் சொன்ன பதில்...)

* ஜீவராசிகளுக்குச் செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா பிதாவாக இருக்கப்பட்ட பரமேஸ்வரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது. நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயின் படமாடக் கோயில் பகவர்க் கீதாமே... இதற்கு அர்த்தம், "மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும்'' என்பது.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSource:Varagooran Narayanan