Announcement

Collapse
No announcement yet.

காது கொடுத்து கேட்கும் தெய்வம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காது கொடுத்து கேட்கும் தெய்வம்

    காது கொடுத்து கேட்கும் தெய்வம்



    Click image for larger version

Name:	Lord Venkateswara.jpg
Views:	1
Size:	12.5 KB
ID:	35182

    உலகின் பணக்கார கடவுள் யார் என்றால் எளிதாக சொல்லிவிடலாம் ஸ்ரீமந் நாராயணன் என்று. பெருமாள் கோயில்கள் அனைத்தும் மகிமை வாய்ந்தவை என்றாலும், திருப்பதி பெருமாளுக்கு சைவம்-வைணவம் என்ற பாகுபாடு கிடையாது. அவ்வளவு ஏன் பிற மதத்தினர் பலரும் திருப்பதி பெருமாளுக்கு பக்தர்களாக உள்ளனர்.

    காக்கும் தெய்வமான பெருமாளை வழிபட வழிபட வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும். அத்தகைய நல்ல திருப்பம் தந்த தெய்வத்திற்கு நன்றி கடனாக நாம் பணத்தையோ, தங்க ஆபாரணங்களோதான் தர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படி இருந்தாலும் அவற்றை ஏன் நாம் காணிக்கையாக தருகிறோம்? என்றால், “இறைவா.. நீ தந்த செல்வங்களின் ஒரு சிறுபகுதியை, நான் நன்றி உள்ளவன் என்பதை உணர்த்தவே உனக்கே காணிக்கை ஆக்குகிறேன். உன் திருக்கோயில் வளர்ச்சியை கண்டு, என் பக்தியையும், நீ எனக்கு தந்த அந்தஸ்தையும் இந்த உலகம் அறியட்டும்.” என்கிற காரணத்துக்காகதான்.

    நம் வசதிக்கு ஏற்ப சிறு காணிக்கையானாலும் நமக்கு இஷ்டமான திருக்கோயில்களுக்கு தந்திடும்போது, அவை அந்த திருக்கோயில்களின் சார்பாக அன்னதானம் போன்ற எண்ணற்ற மக்கள் நலப்பணிகளுக்கு சென்றடைகிறது.

    என் வசதிக்கு ஏற்ப நான் ஒரு ரூபாய் காணிக்கை தருவதால் இறைவன் மகிழ்ச்சி அடைவானா? என நினைக்க வேண்டாம். தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் இருந்தாலும், ஒரு ஏழை தருகிற ஒரு ரூபாய்தான், அந்த தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது ரூபாயை ஒரு லட்சமாக உயர்த்துகிறது. ஆகவே காணிக்கை எதுவானாலும் – அது எவ்வளவு ஆனாலும் நம் அன்பான பக்தியால் அதற்கு மதிப்பு கூடுமே தவிர குறையாது.

    காது கொடுத்து கேட்கும் தெய்வம்

    திருப்பதி பெருமாள் சில யுகங்களுக்கு முன்புவரை தன்னை நாடிவரும் பக்தர்களிடம் பேசியதாகவும், பிறகு பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க பேசுவதை நிறுத்திவிட்டு பக்தர்களின் குறையை காது கொடுத்து கேட்டு அதற்கு தீர்வு தருவதாகவும் ஸ்தலபுராணம் சொல்கிறது.




    Read more from here: http://bhakthiplanet.com/2013/09/lord-perumal-temple-article/

  • #2
    Re: காது கொடுத்து கேட்கும் தெய்வம்

    ஓம் நமோ வெங்கடேசாய
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X