Announcement

Collapse
No announcement yet.

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயி

    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர் - 609 311. நாகப்பட்டினம் மாவட்டம்.

    Click image for larger version

Name:	Bramapureswarr.jpg
Views:	1
Size:	55.7 KB
ID:	35188


    அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்
    தேவாரப்பதிகம்

    திருக்கடையூர்-திருக்கடவூர் மயானம் மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர்நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

    இங்குள்ள சிங்காரவேலர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய ராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்றே சாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், கடவூர்மயானம் என்றும், திருமெய்ஞானம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு. திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியுடன் ஆறு சீடர்கள் உள்ளனர். கல்லால மரம் இல்லை. கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.

    ஒட்டிய வயிறுடன் விநாயகர்: விநாயகர், பெரிய வயிறுடன்தான் இருப்பார். இக்கோயிலில் இவர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை, பிரணவ விநாயகர் என்று அழைக்கிறார்கள். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம். படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருப்பதாகச் சொல்வர். படிக்கிற குழந்தைகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் சொல்கிறார்.

    தல வரலாறு:

    ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும் அழிந்து போவார். புது யுகம் துவங்கும்போது, மீண்டும் பிரம்மாவை உண்டாக்கி, அவர் மூலமாக ஜீவராசிகள் பிறக்கும்படி செய்வார். அவ்வாறு பிரம்மாவை அழித்து, மீண்டும் உயிர்ப்பித்த தலம் இது. அதோடு, பிரம்மாவுக்கு உயிர்களை படைக்கும் ரகசியம் பற்றி இங்கு ஞான உபதேசம் செய்தருளினார். பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

    காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.



    Source: http://temple.dinamalar.com/New.php?id=777
    http://maragadham.blogspot.com/2010/10/blog-post_11.html

    Picture: Tamil Temples

  • #2
    Re: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோய&#

    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

    திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் நேர் பின் திசையில் சுமார் 2 km தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.காசி மயானம்,கச்சி மயானம், காழி மயானம், நாலூர் மயானம், கடவூர் மயானம் என்று சைவ சமயத்தில் ஐந்து விதமான மயானங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. காசி மயானம் காஞ்சிபுரத்திலும், காழி மயானம் சீர்காழியிலும், கச்சி மயானம் திருவீழிமிழலையிலும், நாலூர் மயானம் குடவாசல் அருகிலும், இவற்றுள் ஐந்தாவதாக விளங்கும் கடவூர் மயானம், இந்த திருக்கடவூரிலும் அமைந்துள்ளன. இங்கே மயானம் என்ற சொல் திருக்கோயிலையே குறிக்கிறது. மயானம் என்பது சிவன் குடியிருக்கும் இடமாகவே சைவ சமயத்தில் கருதப்படுகிறது. இந்த ஐந்து தலங்களும் மயானத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    நான் இத்திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்து வந்திருக்கிறேன். இங்குள்ள கிணற்றுநீரே திருக்கடவூர் ஸ்ரீ அம்ருதக
    டேஸ்வறர்க்கு அபிஷேகம் செய்ய எடுத்து செல்லப் படுகிறது .
    திரு மெய்ஞானம் என்ற சொல்லே திரு மயானம் என்று மருவியிருக்குமோ என ஓர் ஐயம் எனக்கு. மிகவும் பழமையான திருக்கோயில் இது. திருக்கடவூர் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.


    ப்ரஹ்மண்யன்
    பெங்களூரு.
    Last edited by Brahmanyan; 24-09-13, 20:57.

    Comment

    Working...
    X