பக்தியில் முழுமையாக ஈடுபட என்ன செய்ய வேண்டும்?

ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். குரு சீடர்களுக்கு நற்போதனைகள் செய்வதுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களும் கூறுவார். ஒரு நாள், சீடர்களில் ஒருவன், குருவே! பக்தியில் முழுமையாக ஈடுபட என்ன செய்ய வேண்டும்? ஏகாந்த சித்தி ஏற்பட வேண்டுமானால் அதற்கு என்ன வழியைக் கையாள வேண்டும்? என்று கேட்டான். அவனைப் பார்த்து மெல்லச் சிரித்த குரு, இறைவனிடம் பக்தி செலுத்த பல வழிகள் உள்ளன. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப அந்தந்த வழி களில் முயன்றால் ஏகாந்த சித்தி ஏற்படும். மௌனமாக இறைவனை வழிபடுவது ஒரு முறை.

ஆனால், மனம் இறைவனிடம் ஒன்றாமல் சிதறுமானால், அதை அடக்க இன்னொரு வழி இருக்கிறது. அது கைகளைத் தட்டியபடி இறைவன் பாடல்களைப் பாடுவது. ஒரு மரத்தின் அடியிலிருந்து கை தட்டி னால் அம்மரக் கிளைகளில் இருக்கும் பறவைகள் நாலா பக்கங்களிலும் சிறகடித்துப் பறந்து போகும். அதைப்போல இறைவனின் லீலைகளையும் கரு ணையையும் பாடலாக பாடி நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு கை தட்டினால் உன் மனத்திலுள்ள தீய சிந்தனைகளெல்லாம் அகன்றோடிவிடும். கைகளால் தாளம் போட்டுக் கொண்டே இறை நாம சங்கீர்த்தனம் செய். அப்போது உனக்கு ஏகாந்த சித்தி உண்டாகும் என்று விளக்கினார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendshttp://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2521&Cat=3