திருமணத்தின்போது நிகழ்த்தப்படும் நிகழ்வுகளும் அதற்கான பலன்களும்

விளக்கேற்றுதல்: இருள் விலகி ஒளியேற்படும்.

அரசாணிக்கால் ஊன்றுதல்: அரசு செலுத்த செங்கோல் போலாகும்.

பந்தக்கால் நடுதல்: ஒற்றுமையை வலுப்படுத்திடும்.

மாவிலை தோரணம்: மங்கலம்
பெருகும்.

திருமாங்கல்யம்: இறைவனின் நினைவாகும்.

திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட நூல்: வாழ்க்கை, மேன்மை, ஆற்றல், தூய்மை, தெய்வத் தன்மை போன்ற நற்குணங்கள் அமையும். விவேகம், தன்னடக்கம் உண்டாகும். தொண்டுள்ளம் மேம்படும். இவ்வளவு நற்பலன்களைத் தரும் அடையாளமே 9 நூலிழை கொண்ட மஞ்சள் நிற தாலிசரடாகும்.

அம்மி மிதித்தல்: பாறையைப் போன்று உள்ளம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தல்.

அருந்ததி பார்த்தல்: கற்பின் சிறப்பினை அறிவுறுத்துதல்.

ஹோமம் வளர்த்தல்: ஆயுள் நீடிக்கச் செய்யும்.

காப்புக் கட்டுதல்: அவ்வேளையில் துன்பம் நிகழாதிருப்பதற்காக.

பூநூல் அணிவித்தல்: மந்திர உபதேசங்களை மனதில் பதியச் செய்திட.

படையல்: அனைத்துத் தேவதைகளுக்கு பிரியம்.

காசி யாத்திரை: பிரம்மச்சாரியாக இருந்தவனை இல்லறத்தானாக மாற்றும் நிகழ்வு.

காப்பரிசி மலர்: முப்பத்தி முக்கோடி தேவர்களும் மனிதர்களும் அருளாசி வழங்குவதாக ஐதீகம்.

மஞ்சலாடை: மங்கலமும், நோய் தடுப்பும் உண்டாகிட.

மாலை மாற்றிக் கொள்வது: மாலைகளில் உள்ள மலர் போல் மணம் பெற்று ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கணவனுக்கு மென்மையாக பணிபுரிதலை உணர்த்துவது.

யாகசாலை: மணம், மனம் மாறிட உதவுகிறது. இது அக்னி தேவதையின் சாட்சியாக திருமணத்தினை நடத்துவதாக ஐதீகம்.

விருந்தோம்பல்: சகல ஜீவராசிகளுக்கும் உரிய விருந்தோம்பல் பண்பு.
வாழ்த்துதல்: இம் மண்ணுலகில் 16 பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்திடும் பண்பு.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendshttp://dinamani.com/weekly_supplements/sunday_