Announcement

Collapse
No announcement yet.

கங்கை பூமிக்கு வந்த வரலாறு:

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கங்கை பூமிக்கு வந்த வரலாறு:

    கங்கை பூமிக்கு வந்த வரலாறு:




    புனித கங்கை நதி தேவலோகத்தில் இருந்து இந்த பூமிக்கு வந்த வரலாறு மிகவும் நீண்டது அதே போல் கடினமானதும் கூட..

    அத்தகைய சாதனையை புரிந்தவர்கள் யாரெனில்..?
    நம் மற்றும் நற்குன நாயகன் மற்றும் ரகுகுல நாயகனுமான
    ஸ்ரீ ராமனின் முன்னோர்களே ஆவர்...

    முன்னொரு காலத்தில் பாஹூகன் என்ற அரசன் அயோத்யா நாட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்தான்.ஒரு சமயம் அண்டை நாட்டு பகைவர்களால் தோற்கடிக்கப்பட்டு காட்டிற்க்கு வந்தான். காட்டில் அவன் மனைவியுடன் இருந்த சில நாட்கள் கழித்து இறந்து விட்டான்.

    அப்போது அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். அவள் ஒளர்வரிஷி ஆசிரமத்தில் ஒரு மகனை பெற்றாள். ஒளர்வரிஷி அவனுக்கு சகரன் என்று பெயர் வைத்து போர் கலைகள் அனைத்தையும் கற்று கொடுத்தார். சகரன் தந்தை ஆட்சி செய்த நாட்டிற்க்கு சென்று பகைவர்களை வென்று அரசனானார். பாரதத்தை தாக்க வந்த தாலஜங்கர் சக்,யவனர் பர்பர முதலிய அந்நிய தேசத்து பகைவர்களை வென்று சகரன் சக்கரவர்த்தி ஆகிவிட்டார்.

    ஒருமுறை சகரன் அச்வமேத யாகத்தை தொடங்கினார்.அவனுக்கு சுமதி,கேசினி என்று இரு மனைவியர் இருந்தனர்.அச்வமேத யாகம் நெடுநாள் நீடித்தது.சகரன் நூறு யாகம் செய்து விட்டால் இந்திர பதவி அடைந்து விடுவான் என்ற பயத்தில் அச்வமேத யாக குதிரையை இந்திரன் திருடிச்சென்று விட்டான்.

    சகர ராஜா மூத்த மனைவி புத்திரர்களை அனுப்பி யாகக்குதிரையை கண்டுபிடித்து கொண்டுவர சொன்னார். சகரரின் அறுபதாயிரம் புதல்வர்களும் பூமியெங்கும் சென்று தேடினார்கள்.

    இறுதியில் பூமியை தோண்ட ஆரம்பித்தார்கள்.பூமியின் அதள பாதாளத்தில் தோண்டி விட்டார்கள்.

    இறுதியில் கபில முனிவரின் ஆசிரமத்தை கண்டனர்.கபில முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார்.அவர் பக்கத்தில் குதிரை மேய்ந்து கொண்டிருந்தது. சகர புத்திரர்கள் கூறினார்கள்.இதோ பார் குதிரையை திருடிவிட்டு ஏதும் அறியாதவர் போல கண் மூடி பாசாங்கு செய்து கொண்டிருக்கிறார். இவரை கொன்றுவிட்டு குதிரையை கொண்டு செல்வோம் என்று கோடாரி கடப்பாறைகளால் அவரை கொல்ல வந்தனர். கபில முனிவர் ஒன்றும் அறியாது கண்களை திறந்தார்.அக்கணமே அனைவரும் எரிந்து சாம்பலானார்கள்.கபில முனிவர் பற்று பகையற்றவர்.ஆதலால் சகர புத்திரர்கள் தம் தீய எண்ணங்களால் எரிந்து விட்டனர்.

    குதிரையை தேடிப்போன புதல்வர்கள் திரும்பவில்லை என்று அறிந்த இளய மனைவியின் மகன் அசமஞ்ஜசன் மகன் அம்ஸுமானை குதிரையயும் அதை தேடபோன தன் புத்திரர்களையும் கண்டுபிடித்து அழைத்துவர அனுப்பினான். அசமஞ்ஜசன் பூர்வ ஜன்மத்தில் ஒரு சித்தன்.அவன் புத்தி சுவாதீனமில்லாமல் நடந்துகொள்வான்.

    அவன் ஒரு சித்த யோகி என்று அறியாது அவன் மகன் அம்ஸுமானை அனுப்பினான். அவன் காடு மலை எல்லாம் தேடினான். அவன் தந்தை மார்கள் பூமியை அதள பாதாளமாக தோண்டிவிட்டிருந்தனர். அதில் மலை பெய்து கடலாக மாறிவிட்டதை கண்டான்.அதில் பயணம் செய்து இறுதியில் கபில முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான்.அங்கு குதிரை இருப்பதையும் பக்கத்தில் பெரிய சாம்பல் குவியலயும் கண்டான்.எல்லாவற்றயும் புரிந்து கொண்டவன் கபில முனிவரை துதி செய்தான்.

    “பகவானே உம்மை வணங்குகிறேன்:படைக்கும் கடவுள் பிரம்மாவாலும் மற்ற தேவர்களாலும் தாங்கள் சத்திய சொரூபமாக அறியப்படவில்லை.தாங்கள் சித்தர்களுக்கு யோகம் பயிலும் முறையை உபதேசித்துள்ளீர்கள்.சாங்கிய யோகம் என்ற யோக நூலை தந்து மோட்சம் அடைவதற்க்கு வழிகாட்டியிருக்கிறீர்கள்.

    விஷ்ணு பகவானின் அம்சாவதாரமான தங்கள் கோபத்தால் என் தந்தைகள் மாண்டு போகவில்லை.அவர்களது தவறான எண்ணமே அவர்களை பஸ்மம் செய்துவிட்டது” அம்ஸுமான் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் கபில முனிவர் கூறினார். ”எனக்கு எவரிடமும் கோபமில்லை,உன் தாத்தாவின் யாகக்குதிரையை கொண்டுசெல்வாயாக. கங்கை நீர் பட்டாலன்றி உன் சிறிய தந்தைகள் முக்தியடய மாட்டார்கள்.” கபிலர் இவ்வாறு கூறியதும் அம்ஸுமான் அவரை வலம் வந்து வணங்கி விட்டு குதிரையை எடுத்து சென்றான்.

    சகர மன்னர் அந்த குதிரையை வைத்து யாகத்தை செய்து முடித்தார்.

    அதன் பின் பேரன் அம்ஸுமானை அரசனாக்கி விட்டு கானகம் சென்று தவம் செய்து இறைவனடி சேர்ந்தார். அம்ஸுமான் சில காலம் ஆட்சி புரிந்தார்.அதன் பின் தன் மகன் திலீபனுக்கு முடிசூட்டிவிட்டு காடு சென்று கங்கையை வரவழைக்க தவமிருந்தான். தன் லட்சியம் நிறைவேறாமல் காலம் கடந்த பின் இறந்து போனான்.

    அம்ஸுமான் மகன் திலீபன் தன் மகன் பகீரதனை அரசனாக்கி விட்டு தந்தையை போலவே கங்கையை கொண்டுவரும் முயற்சியில் இறங்கினான். கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தபோது அவன் ஆயுலும் முடிந்துவிட்டது. பகீரதன் வயோதிகம் வரும் முன் நேராக காடு சென்று மிகக்கடும் தவம் செய்தான்.

    அவன் தவத்தால் மகிழ்ந்து கங்காதேவி பிரத்யட்சமானாள்,”உனக்கு வேண்டிய வரத்தை கேள்” என்றாள். “தேவி நீங்கள் பூலோகத்திற்கு வந்து என் மூதாதயர்களை கடைத்தேற்ற வேண்டும்” என்றார்.

    அதற்க்கு தேவி கூறினாள்.-“அப்பனே நான் வருவதாக இருந்தால் நான் வானகத்திலிருந்து பூமியை நோக்கி பாய்ந்து வரும்போது என்னை எவராலும் தாங்க இயலாது.மேலும் ஒரு விஷயம்.நான் பூமியில் பெருக்கெடுத்து ஓடும்போது பாவிகளும் தூராத்மாக்களும் என் நீரில் மூழ்கி தம் பாவங்களை கழுவிக்கொள்வார்கள்.அந்த பாவங்களை நான் எங்கே போய் தொலைப்பேன் “என்றாள்.

    பகீரத மன்னன் பதில் கூறினார்.”தேவி வானகத்திலுருந்து நீங்கள் பாய்ந்து வரும்போது உங்களை தாங்கிக்கொள்ள எல்லாம் வல்ல சிவபெருமான் இருக்கிறார்.நீங்கள் கவலைப்பட வேண்டாம். கங்கை நீர் அசுத்தமாகாது.ஏனெனில் இக பர லோகங்களில் சுக போகங்களை துறந்த பற்றற்ற தர்மாத்மாக்களும்,பிரம்மத்தை அறிந்த ஞானிகளும் பரோபகாரம் செய்யும் நல்லவர்களும், பகவானின் தூய பக்தர்களும் கங்கை நதியில் நீராடினால் அந்த பாவப்பட்ட நீர் தூய்மை ஆகிவிடும்.

    ஏனெனில் இவர்கள் இதயத்தில் எங்கும் நிறைந்த நாராயணன் குடிகொண்டுள்ளார்” என்று பகீரத ராஜா கூற கங்கை பூமிக்கு வர சம்மதித்தாள்.பகீரதன் நான் இதோ சிவபெருமானை நினைத்து தவமிருந்தார்.ஆஷுதோஷ் என்று புகழ் பெற்ற சிவபெருமான் ஒரு வருடத்திற்குள் பிரத்யட்சமாகிவிட்டார்.பகீரதன் தாங்கள் என் மூதாதையர் உய்வதற்காக கங்காதேவியை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றார். சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.

    கங்கை நீர் அசுர வேகம் கொண்டு வானகத்திலிருந்து பாய்ந்து வந்து சிவபெருமானின் சிரசில் விழுந்தது.கங்கையின் கர்வத்தை போக்க சிவபெருமான் கங்கை நீரை அடக்க தன் ஜடா முடியை எடுத்து இறுக்கமாக கட்டிக்கொண்டார்.ஜடாமுடியில் கங்கை வெளியேற முடியாமல் உள்ளே சுற்றி திரிந்தது. பகீரத மன்னன் சிவபெருமானை துதி செய்தான்.சிறு தாரையாக வெளியில் விட கேட்டுக்கொண்டான்.சிவபெருமான் அவ்வாறே செய்தார்.

    பகீரத மன்னன் ஒரு தேரில் ஏறிக்கொண்டான். மன்னர் தேரில் வழி காட்ட கங்கை நீர் பின்னால் பிரவாகமெடுத்து வந்தது.நாடு,நகரம்,காடு,கிராமம்,அனைத்தையும் புனிதமாக்கிக்கொண்டு வந்தது.

    வழியில் ஜஹ்னு என்ற பேரரசன் யாகம் செய்து கொண்டு இருந்தான். கங்கை அவ்வழியாக வந்தபோது யாகசாலைகள்,யாகமும்,வழிபாடு தலத்தையும் கங்கை நீரால் மூல்கடித்து அழித்தது.அதனால் கோபமடைந்த ஜஹ்னு தன் யோகசக்தியால் கங்கை நீரை ஒரு சொட்டாக்கி குடித்து விட்டான்.இதை கண்ட பகீரத மன்னன் அவரை சமாதானப்படுத்தி விஷயத்தை கூறினார்.அரசன் ஜஹ்னு சமாதானமடைந்து கங்கை நீரை காது வழியாக வெளியில் விட்டான்.

    பகீரதன் தேரில் பின்னால் சென்ற கங்கை நீர் பகீரதன் மூதாதயர் சாம்பலாக கிடந்த இடத்தில் நீரோட்டமாக பாய்ந்து சென்று அந்த சாம்பலை நீரில் மூழ்கடித்தது.உடனே சகர புத்திரர்கள் தேவஉரு பெற்று உயிர்த்தெழுந்து தேவலோகம் (வானுலகம்)சென்றடைந்தனர்.

    பகீரதன் நாடு அயோத்தியா திரும்பி நல்லாட்சி புரிந்தான்…



    Source:Sundar Sriram

    Veera Vainavam

  • #2
    Re: கங்கை பூமிக்கு வந்த வரலாறு:

    ஓ இதுதான் பகீரதப்ரயத்னமா?

    Comment

    Working...
    X