Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 060/100 அழகா ! அருளாய் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 060/100 அழகா ! அருளாய் !

    3. அழகர் அந்தாதி - 060/100 அழகா ! அருளாய் !

    போதகத்தானும் , வெண்போதகத்தானும் , புராந்தகனும்
    தீதகத்தானது தீர்தரும் காலை , "திரு அரை சேர்
    பீதகத்தாய் ! அழகா ! அருளாய் " என்பர்; பின்னை என்ன
    பாதகத்தால் மறந்தோ தனி நாயகம் பாவிப்பவரே !


    பதவுரை : போது + அகத்தானும்
    தீது + அகத்து + ஆனது


    போது அகத்தானும் தாமரையில் இருக்கும் பிரமனும் ,
    வெண் போதகத்தானும் வெள்ளை யானையை உடைய இந்திரனும் ,
    புராந்தகனும் திரிபுரம் எரித்த சிவனும்
    தீது அகத்து ஆனது தங்கள் மனத்தில் உள்ள துன்பங்களை
    தீர் தரும் காலை தீர்க்க வேண்டிய காலத்தில்
    திரு அரை சேர் பீதகத்தாய் "பீதாம்பரத்தை இடையில் உடுத்தியவனே !
    அழகா அருளாய் என்பர் அழகனே ! கருணை செய்வாய் ! "என்று வேண்டுவர்
    பின்னை அந்த துன்பங்கள் தீர்ந்த பின்பு
    என்ன பாதகத்தால் மறந்தோ என்ன தீவினையாலோ எல்லாவற்றையும் மறந்து
    தனி நாயகம் பாவிப்பர் தானே தலைவர் என்று நினைப்பார்



    Last edited by sridharv1946; 26-09-13, 21:13.
Working...
X