கோவிந்தன்:


Click image for larger version. 

Name:	Govindan.jpg 
Views:	6 
Size:	41.1 KB 
ID:	1310


"கோ" என்றால் பூமி என்று பொருள். "இந்த சிருஷ்டியின் தொடக்கத்தில் சென்ற இடமறியாதபடி கடலில் ஆழ்ந்து மறைந்துவிட்ட இந்த பூமியை எல்லாம் வல்ல அந்த ஸ்ரீமந் நாராயணன், வராஹமாகச் சென்று மீட்டெடுத்து காத்*தவர் ஆதலின் அவருக்கு இப்பெயர் உரியதாயிற்று." விந்த -என்றால் ஒன்றைத்தேடி, நாடிப்போய் அடைவது ஆகும்.

மேலும், "கோ" என்றால் பசு. பசுக்களுக்குத் தலைவர். அதாவது, "துவாபர யுகத்திலே, கண்ணனாக ஆயர்குலத்தினில் வளர்ந்த காலத்திலே, கண்ணன் சிறுவனாக இருந்தபோது தேவலோகத்து அரசனான இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக கோபர்களிடம், அவர்கள் வழக்கமாகச் செய்யும் இந்திரபூஜையை நிறுத்திவிட்டு கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்யச் சொன்னார். அப்படி அவர்கள் செய்தவுடன் இந்திரனுக்குக் கோபம் வந்து கோகுலத்தையே அடித்துக் கொண்டுபோகும் அளவில் மழையை உண்டுபண்ணிவிட்டான். அப்பொழுது கண்ணன் கோவர்த்தனமலையைத் தூக்கி, மக்களையும் பசு முதலிய பிராணிகளையும் காப்பாற்றினார்.

பிறகு தேவேந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, எல்லா உயிர்களையும் காப்பாற்றுபவர் என்று பொருள் படும் 'கோவிந்தன்' என்ற பெயரை கண்ணனுக்குப் பட்டம் சூட்டி அபிஷேகமும் பண்ணிவைத்தான். இதற்கு 'கோவிந்த பட்டாபிஷேகம்' என்றே பெயர். இப்படி பசுக்களின் இனத்தினை காத்து நின்றதாலும் இப்பெயர் அவருக்கு நிலைத்ததாகிவிட்டது."

இன்னும் பார்ப்போமேயானால், "கோவிந்தன்"-என்ற சொல்லுக்கு, பக்தியுடன் பெயரிட்டுக் கூப்பிடுதலால் அடையக்கூடியவர் என்றும், கூப்பிடும் தூரத்தில் இருப்பவர் என்றும் பொருள்களாகும்.

இப்படி "கோவிந்தன்" என்ற நாமத்திற்கு புனிதங்கள் ஏராளம் இருக்கும் போது,இவைகளை அறியாத இன்றைய கலியுக மாந்தர் சிலர் அப்பெயரை வைத்தே கேலியாக விளையாடுவதை காண நேர்கிறது.மேலும் சிலர் இப்புனித தன்மை கொண்ட பெயரை ஏமாறுதல் தொடர்புடைய நிகழ்வுகளின் போதும்,குறிப்பாக திருமண் இடுவோரை கேலி செய்வதாகவும், திரைப்படங்களிலும், நேரிலும் கூட சில சமயம் கையாள்வதை காண நேர்கிறது.அவர்களின் மடமையை என்னவென்று உரைப்பது..?

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் தான் அருளிச்செய்த திருப்பவையிலே,
"கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" என்றும்,
"குறைவொன்றுமில்லாத கோவிந்தா" என்றும்,
"இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா" -என்றும் ஆசைதீர இப்பெயரால்அந்த கண்ணனை அழைத்து உவகை கொள்கிறாள்.

இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் ஸ்ரீ ஆதி சங்கரரோ தன்னுடைய பஜ கோவிந்தத்தில் முழுக்க முழுக்க கோவிந்த நாமாவளியினை ஆசைதீர பாடிக்களிக்கிறார். மனிதனுக்கு கோவிந்தனின் பெருமைகளையும் கோவிந்த சேவையின் அவசியங்களையும் வலியுறுத்துகிறார்.ஒவ்வொரு மனிதனும் பொருளுடன் படித்து உணர வேண்டிய பொக்கிஷம் அந்த பஜ கோவிந்த கீர்த்தனை ஆகும்.

மேலும் இந்த கோவிந்த நாமமானது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 187-வது, 539-வது பெயர்களாக வருகின்றது.
விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் நான்காவது பெயரராக விளங்குகிறது. அதுமட்டுமின்றி "மனித வாழ்வின் பிறப்பு இறப்பு என்ற கோரமான விஷத் தீண்டலைப் போக்கவல்ல பெயர் இது" -என்று புராணங்கள் இதன் புகழினை விவரிக்கின்றன.

இப்படி எண்ணிலடங்காத புகழையும், பெருமையையும், புனித தன்மையினையும் தன்னகத்தே கொண்ட இந்த உயரிய கோவிந்த நாமத்தினை, நாம் வாழ்நாளில் பக்தி சிரத்தையுடன் அனு தினமும் கூறி, அந்த "கோதை புகழ் கோவிந்தனின் அன்பை நாடி அடைவோமாக..."


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

source: Sundar Sriram