Announcement

Collapse
No announcement yet.

"மாயை -என்றால் என்ன?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "மாயை -என்றால் என்ன?

    "மாயை -என்றால் என்ன?


    Click image for larger version

Name:	Maya.jpg
Views:	1
Size:	41.7 KB
ID:	35227


    "மாயை -என்றால் என்ன?அது என்ன அவ்வளவு வல்லமை பொருந்தியதா??"-என்று ஒரு நாள் நாரதர் கிருஷ்ண பரமாத்மாவிடம் தன் கேள்வியை எழுப்பினார்.

    அதற்கு கிருஷ்ணர்,"சரி அது ஒருபுறம் இருக்கட்டும்.எனக்கு தாகமாக உள்ளது.பருக நீர் கொண்டு வா"-என்றார் நாரதரிடம். நாரதரும் ஒரு பாத்திரத்துடன் நீர் கொண்டுவர அருகில் உள்ள நதி ஒன்றை நோக்கி விரைந்தார்.
    நதியில் நீரை எடுத்துக்கொண்டு கரை ஏறும்பொழுது ஒரு பேரழகு வாய்ந்த பெண்ணை காண்கிறார்.அவளழகில் மயங்கி,ஆசை கொண்டு, காதல் கொண்டு பின் திருமணமும் கொள்கிறார்.பிள்ளைகளும் பல பெற்றெடுத்து சம்சார மோகத்தில் பல ஆண்டுகள் உருண்டோடிவிடுகின்றன..

    அப்படியிருக்க திடீரென ஒருநாள் பெரு மழை பெய்கிறது..அதனால் பெருக்கெடுத்த காட்டு வெள்ளத்தில் அவருடைய மனைவியும்,பிள்ளைகளும்அடித்து கொண்டுபோய் விடுவதை பார்த்து "ஓ" -வென அழ ஆரம்பிக்கிறார்.அப்போது அவரின் பின்னால் யாரோ தட்டுவதை உணர்கிறார்.திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தால் கிருஷ்ணர் நிற்கிறார்.நாரதருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

    "என்ன நாரதரே பாத்திரத்தில் நீரை வைத்துக்கொண்டு இங்கேயே நின்று கொண்டு இருக்கின்றீரே?"-என வினவினார்.
    நாரதர் உடனே தான் இதுவரை கண்ட நிகழ்வுகளை என்னவென்று கிருஷ்ணரிடம் ஆச்சரியத்தோடு வினவினார்...
    அதுதான் நாரதரே "மாயை"."மாயையின் வல்லமையை உணர்த்தவே நான் இவ்வாறு ஒரு சிறு அற்புதத்தினை உனக்கு உண்டாக்கினேன்.ஆசையின் விளைவால் மாயையின் வலையில் சிக்கி கொஞ்ச நேரத்திற்குள்அனுபவித்த விளைவுகளை கண்டீரா?இப்போது புரிகிறதா மாயை-என்றால் என்னவென்று" என்று கேட்டார்…


    தூங்கிகொண்டு இருப்பவனுக்கு கனவு என்பது எவ்வாறு உண்மையானதாகவே இருக்கின்றதோ,அதுபோலவே வாழ்வில் மாயை -எனும் வலையில் சிக்கிக்கொண்டு இருப்பவனுக்கு நடப்பவையெல்லாம் நிஜமாகவே தோன்றும்.

    “ஆத்ம ஞானம்” என்கிற அறிவொளியை அடையும் வரையில் அது நீடிக்கும்



    Source:Sundar Sriram
Working...
X