Announcement

Collapse
No announcement yet.

அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோ

    அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்

    தென்தமிழகத்தில் ஸ்ரீரெங்கத்திற்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான வைணவ ஆலயம் அரியக்குடியாகும். அரியக்குடி அருள்மிகு திருவேங்கடம் உடையான் திருக்கோவில் தென்திருப்பதி என்ற பெருமையுடன் அழைக்கப்படும் பழைமையான சிறப்புமிக்க ஆலயம் பெருமாள் பெயர் திருவேங்கடம் உடையான் என்றும் தாயார் பெயர் அலமேலு மங்கைத் தாயார் எனவும் அழைக்கப்படுகின்றனர். இது சிவகெங்கை மாவட்டம் காரைக்குடியின் கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காரைக்குடியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது. பிள்ளையார்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு திருப்பதி பெருமாளே எழுந்தருளி உள்ளதால், திருப்பதிக்கு நேந்து கொண்ட பிரார்த்தனைகளை செலுத்தலாம் என்பது ஐதீகம், அந்த பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.



    தலபெருமை:



    இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது. ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்திலும் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஆடி சுவாதியன்று கருடனின் ஜென்மநட்சத்திரமான "மகா சுவாதி' நடக்கிறது.

    ராமானுஜர் காலத்தில் உற்சவ விக்கிரகங்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து அனைத்து கோயில்களுக்கும் கொடுக்கப்படுகின்றன என்பதை அறிந்த சேவுகன் செட்டியார் தனது முயற்சியால், உடையவரால் ஆராதிக் கப்பெற்ற திருவேங்கடம் உடையானை இத்தலத்திற்கு கொண்டு வந்தார்.திருப்ப தியிலிருந்து சடாச்சரியும், திருமயத்திலிருந்து அக் னியும் கொண்டு வரப்பெற்று திருவேங்கடம் உடையான் கோயில் திருப்பணி துவங்கியது. அன்று முதல் அரியக்குடி "தென்திருப்பதி' என புகழ் பெற்றது.

    தல வரலாறு:


    இப்பகுதி பிரமுகரான சேவுகன் செட்டியார், திருவேங்கடம் உடையானின் தீவிர பக்தராக இருந்தார். அவரைக் காண வரும் மக்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்தி வந் தார். வயதான நிலையில் ஒரு நாள் தலையில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலையேறி செல்லும் வழியில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் முன் "எம்பெருமான்' தோன்றினார். ""தள்ளாத வயதில் மலையேறி வரவேண்டாம். பக்தன் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன்,'' என கூறி மறைந்தார்.ஊர் திரும்பிய அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், ""நாளை நீ மேற்கே செல்..என் இடம் தெரியும்,'' என்றார். அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்றபோது, தற்போது கோயில் இருக்குமிடத்தில் ஒரு துளசி செடியும், தேங்காய் காளாஞ்சியும் இருந்தன. அந்த இடத்தில் கோயில் கட்ட நிலத்தை சீர்செய்தபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது.திருப்பதியை போன்று பெருமாளை தனியாக நிறுவ விரும்பாது, அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.



    பிரார்த்தனை

    எம்பெருமாளுக்கும் அலர்மேலுமங்கைத் தாயாருக்கும் திருக்கல்யாணம் செய்து வைப்பதாகப் பிரார்த்தனை செய்து கொண்டால் திருமணமாகா திருந்த பெண்களுக்குத் திருமணம் நடைபெறுவது, எம்பெருமானின் அபார சக்தியை வெளிப்படுத்தும் செயலன்றோ!

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

    ஆலயத்தில் மிக பெரிய தங்க கருடவாகனம் உள்ளது. பொன்னொளி வீசும் கருடனில் பூ அளந்த நாயகன் வீற்று பவனி வருவது கண்கொள்ளா காட்சி. அந்த தங்கக் கருடசேவை இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு அப்பகுதி மக்கள் கருட சேவையை பிரார்த்தனையாக செய்து வருகிறார்கள். பலனும் கைமேல் கிடைக்கிறது.


    Click image for larger version

Name:	karudar.jpg
Views:	1
Size:	7.0 KB
ID:	35231


    திறக்கும் நேரம்:

    காலை 6 மணி முதல் 4 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    http://www.thenthiruppathi.com/speciality.html

    http://temple.dinamalar.com/New.php?id=762
Working...
X