Announcement

Collapse
No announcement yet.

குலதெய்வ வழிபாடு;

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குலதெய்வ வழிபாடு;

    குலதெய்வ வழிபாடு;
    ----------------------------
    ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெருக்கமான துணை வேண்டும் அது வாழ்க்கை துணையாக இருக்கலாம்,நண்பனாக இருக்கலாம் அப்படி இல்லாவிட்டால் நம்முடைய குல தெய்வமாக இருக்கலாம்.நாம் நினைக்கும் போது உதவி செய்யும் தெய்வமே குல தெய்வம் ஆகும்.

    நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.இவர்களுக்கு காவல் தெய்வம்,குல தெய்வம் வழிபாடு இருக்கும்.பிறக்கும் குழந்தைகளுக்கு,முதல் முடி குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவார்கள்.சில்ர் காது குத்துவார்கள்.

    குலதெய்வம் வழிபாடு இந்து சமயத்தினருக்கும் முக்கியமான ஒன்றாகும்.அடிப்படையில் நம்முடைய இந்து மதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது.குல தெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.அப்படியானால் குலதெய்வமும்,இறைநிலையும் வேறுவேறா?அப்படி கிடையாது,அதாவது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே இதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

    உலகத்தில் இன்பத்தையும்,பற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு எல்லோராலும் முடியாது,லௌதீக வாழ்வு வாழ்வபவர்களுக்கும் தான் இறைதூதர்களையும்,தேவதைகளயும் இறைவன் படைத்திருக்கிறார்.அவர்களே குலதெய்வங்கள் ஆவார்கள்.

    குல தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள்,முழுவதும் பங்காளி ஆவார்கள்.இவர்கள் அண்ணன்,தம்பி உறவு முறையாக கருதுபவர்கள்.இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ,எடுக்கவோ மாட்டார்கள்.

    மேலும் நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும்,முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும்.எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்.மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.




    Source:
    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.




    NOTE:

    About our family Kula deivam

    Our Kuladeivam is Sri.Ayyanar located at a village in Kumbakonam , called Kadichambadi

    Every month Pournami Pooja along with Panguni Uthiram and Every year Samvasthram at Kadichambadi Ayyanar by Kadichambadi Ayyanar Kaigarya Sabha.

    Whenever We visit India, we always make it a point to Visit this Temple and do Abhishekam

    Click image for larger version

Name:	kadichambadi 2.jpg
Views:	1
Size:	81.8 KB
ID:	35233Click image for larger version

Name:	Kadichambadi Ayyanar Temple.jpg
Views:	1
Size:	95.2 KB
ID:	35234


    Samiye Saranam Ayyappa


    http://wikiedit.org/India/Kadichambadi/231602/
Working...
X