1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்

2.ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

3.மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

4.கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, வந்தால் நல்ல பலன் ஏற்படும்

5.சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை வந்தால் நல்ல பலன் ஏற்படு

6.கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் நல்ல பலன் ஏற்படும்

7.துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை ம செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

8.விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

9.தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்

10மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

11.கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்

12.மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்

கடை மற்றும் வீடுகளில் திருஷ்டி இருப்பதாக தோன்றினால் நாட்டு மருந்து கடைகளில் வெண்கடுகு கிடைக்கும்,அதை சாம்பிராணியுடன் கலந்து போட திருஷ்டி குறையும்.புகைப்போட கரியில் மண்ணெண்ணை ஊற்றக்கூடாது,பதிலாக கற்பூரத்தை பொடித்து போட்டு பற்ற வைக்க வேண்டும்.செவ்வாய்,வியாழன்,வெள்ளிக் கிழமைகள் புகைப் போட நல்லது.அதிகாலை ,சந்தியாகாலங்கள் சிறந்தது.குங்கிலியம் தனியாக வீடுகளில் உபயோகிக்க கூடாது கெட்ட விஷயங்கள் வீடுகளை வந்தடையும் என்பதால்


source: Ram Ram



Kalanasundaram ramachandran

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends