Announcement

Collapse
No announcement yet.

ஈசன் காட்க்ஷி அளித்தல்..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஈசன் காட்க்ஷி அளித்தல்..

    ஈசன் காட்க்ஷி அளித்தல்..


    Click image for larger version

Name:	Easan.jpg
Views:	1
Size:	111.9 KB
ID:	35237

    1, திருவையாறு – ஈசன் அப்பருக்கு காட்க்ஷி தந்தது.

    2, முக்கீச்சுரம் – உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வண்ணத்தோடு காக்ஷி அளித்தது.

    3, திருபூந்திருத்தி – நந்தியை விலக செய்து சம்பந்தருக்கு காட்சி தரல்.

    4, திருவீழிமிழலை – சம்பந்தருக்கு சீர்காழி கோலத்தை இங்கு விண்ணிழி விமானத்தில் காட்டுதல்.

    5, கீள்வேளூர் – கேடிலியப்பர் அகத்தியருக்கு வலது பாதம் தரிசினம் தரல்.

    6, திருகழுகுன்றம் & திருப்பெருந்துறை – மணிவாசகருக்கு இறைவன் குருவடிவமாக காட்சி தந்தது.

    7, கொட்டையூர் – சோழ மன்னன், ஏரண்ட முனிவர், பத்திர யோகி, முனிவருக்கு இறைவன் காட்சி தரல்.

    8, திருநல்லூர் – அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் காட்சி தரல்.

    9, திருவாவடுதுறை – முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அளித்து தியாகராஜராக காட்சி தந்தது.

    10, அச்சிறுப்பாக்கம் – திரிநேத்திர தாரிமுனிவர்க்கு காட்சி.

    11, கஞ்சனூர் – பிரம்மனுக்கு திருமண காட்சி.

    12, வடதிருமுல்லைவாயில் – தொண்டமானுக்கு காட்சி.

    13, திருவையாறு – காவிரி வெள்ளம் விலகி வழபடசெய்து சுந்தரர், சேரமானுக்கு காட்சி.

    14, குடவாயில் – திருமண பிந்து முனிவர்க்கு உடர்பிணி தீர்த்து காட்சி.

    15, கைச்சினம் – சாபம்விலகி இந்திரனுக்கு தியாகராஜர் தரிசனம்.

    16, திருப்புறம்பியம் – கோயிலுக்கு வெளியில் ஒரு விறகு வெட்டிக்கு காட்சி.

    17, கொள்ளம்புதூர் – சம்பந்தர் நாவினையே ஓடக்கோலாகக் கொண்டு கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம்பாடி மறுகரை அடைந்து ஈசன் காட்சி தரல்.

    18, திருப்பைஞ்சிலி – வசிட்ட முனிவர்க்கு நடராஜர்பெருமான் காட்சி தந்தது.

    19, திருக்கானப்பேர் – இறைவன் காளை வடிவம் கொண்டு கையில் பொற்செண்டை திருமுடியில் சிழியுங்கொண்டு சுந்தரருக்கு காட்சி தந்தது.

    20, கடம்பந்துறை – கண்வ முனிவர்க்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தரல்.

    21, திருக்கண்டியூர் – சாதாப முனிவர்க்கு பிரதோச தரிசனம், காளத்தி தரிசனமும் காட்டினா.

    22, திருக்கானூர் – உமாசிவயோகம் செய்யும்போது ஈசன் அக்கினி ரூபமாக தரிசனம் தந்தது.

    23, திருவலம்புரம் – ஈசன் அப்பரை தாமே வரவழைத்து தரிசனம் தந்தது.

    24, திருத்தினை நகர் – பெரியன் பள்ளனுக்கு காட்சி தரல்.


    Source: Swanagiri Vasan
Working...
X