ஐந்து விதமான நந்திகேஸ்வரர்கள்.

சாஸ்த்திரங்களில் தரும தேவதை வடிவம் ரிஷபமே ஆகும். ஆனந்த நிலையில் உள்ளது. வெள்ளைமாடு. சாத்வீக குணம் குறிக்கும். நந்தியின் 4 கால்கள் சமம், விகாரம், சந்தோஷம், சாது சங்கமம் என்ற நாங்கு ஆத்ம குணம் உணர்த்தும் இந்த நாங்கு குணங்கள் இல்லாமல் பரம்பொருளை உணர முடியாது என்பது வேத வாக்கு. பாசத்தை களைத்த பசு எப்போதும் பதியயே {இறைவன்} பார்த்து கொண்டிருக்கும்.

1, இந்திர நந்தி {போக நந்தி} கோவிலுக்கு வெளியே இறைவனை நோக்கி இருப்பது 5-ம் பிரகாரத்தில்.

2, பிரம்ம நந்தி {வேத நந்தி} இது மிக பெரிய நந்தி, இதற்கு வேத நந்தி {அ} வேத வெள் விடை என்று பெயர்.

3, விஷ்ணு நந்தி மால்விடை. சிவன் திரிபுரம் எரிக்க முற்பட்டபோது விஷ்ணு இடப வடிவமெடுத்து அவரை ஏந்தியது சிவன் சன்னதி அருகில் உள்ளது.

4, ஆத்ம நந்தி கொடி மாத்தருகில் இருப்பது. இறைவன் - பதி; ஆத்ம நந்தி பசு. பிரதோஷ காலத்தில் வழிபாட்டிற்குரியது

5, தரும நந்தி தரும நந்தியாக நிலைத்திருப்பது மகா மண்டபத்தில் ஸ்வாமி அருகில் உள்ளது. சிறியதாக இதன் மூச்சு காற்று ஸ்வாமியின் மீது பட்டு அவரை குளிர்விக்கிறது. இவருக்கும் ஸ்வாமிக்கும் இடையே செல்ல கூடாது.

மேலும் 2 நந்திகள்

அதிகார நந்தி உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பது.
விருஷப நந்தி கருவரை பின்புறம் இருப்பது.

நந்தி அருள்பெற்ற நாதர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமாமுனி, பதஞ்சலி முனிவர், வியக்ரமர்.

இறைவனை தரிசனம் செய்யும் முன்பு நந்தி தேவரிடம் அனுமதி பெற்றே இறைவனை தரிசிக்க வேண்டும்.Source:Swarnagiri Vasan

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends