Announcement

Collapse
No announcement yet.

ஐந்து விதமான நந்திகேஸ்வரர்கள்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஐந்து விதமான நந்திகேஸ்வரர்கள்.

    ஐந்து விதமான நந்திகேஸ்வரர்கள்.

    சாஸ்த்திரங்களில் தரும தேவதை வடிவம் ரிஷபமே ஆகும். ஆனந்த நிலையில் உள்ளது. வெள்ளைமாடு. சாத்வீக குணம் குறிக்கும். நந்தியின் 4 கால்கள் சமம், விகாரம், சந்தோஷம், சாது சங்கமம் என்ற நாங்கு ஆத்ம குணம் உணர்த்தும் இந்த நாங்கு குணங்கள் இல்லாமல் பரம்பொருளை உணர முடியாது என்பது வேத வாக்கு. பாசத்தை களைத்த பசு எப்போதும் பதியயே {இறைவன்} பார்த்து கொண்டிருக்கும்.

    1, இந்திர நந்தி {போக நந்தி} – கோவிலுக்கு வெளியே இறைவனை நோக்கி இருப்பது 5-ம் பிரகாரத்தில்.

    2, பிரம்ம நந்தி {வேத நந்தி} – இது மிக பெரிய நந்தி, இதற்கு வேத நந்தி {அ} வேத வெள் விடை என்று பெயர்.

    3, விஷ்ணு நந்தி – மால்விடை. சிவன் திரிபுரம் எரிக்க முற்பட்டபோது விஷ்ணு இடப வடிவமெடுத்து அவரை ஏந்தியது சிவன் சன்னதி அருகில் உள்ளது.

    4, ஆத்ம நந்தி – கொடி மாத்தருகில் இருப்பது. இறைவன் - பதி; ஆத்ம நந்தி – பசு. பிரதோஷ காலத்தில் வழிபாட்டிற்குரியது

    5, தரும நந்தி – தரும நந்தியாக நிலைத்திருப்பது மகா மண்டபத்தில் ஸ்வாமி அருகில் உள்ளது. சிறியதாக இதன் மூச்சு காற்று ஸ்வாமியின் மீது பட்டு அவரை குளிர்விக்கிறது. இவருக்கும் ஸ்வாமிக்கும் இடையே செல்ல கூடாது.

    மேலும் 2 நந்திகள் –

    அதிகார நந்தி – உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பது.
    விருஷப நந்தி – கருவரை பின்புறம் இருப்பது.

    நந்தி அருள்பெற்ற நாதர்கள் – சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமாமுனி, பதஞ்சலி முனிவர், வியக்ரமர்.

    இறைவனை தரிசனம் செய்யும் முன்பு நந்தி தேவரிடம் அனுமதி பெற்றே இறைவனை தரிசிக்க வேண்டும்.



    Source:Swarnagiri Vasan
Working...
X