1} பஞ்ச பூத ஸ்தலங்கள்.

1, பிருதிவி மண் காஞ்சிபுரம்.
2, வாயு காற்று திருக்காளத்தி {காளஹஸ்தி}
3, தேயு நெருப்பு திருவண்ணாமலை.
4, அப்பு நீர் திரு ஆனைக்கா.
5, ஆகாசம் ஆகாயம் தில்லை சிதம்பரம்.


2} பாதம் படக்கூடாதவை.


மயான கரி, அக்கினி,அடுப்பு, வீபூதி, சான்றோர் மீது, பசுவின் மீது, இரத்தம், முதலானவை மீது நம் பாதம் படக்கூடாது. படுமாயின் சனி நம்மை தொடருவார் என்று ஆசார நூலில் சொல்லப்பட்டு உள்ளது.

3} முச்சுடர்கள்.

1, சூரியன், 2, சந்திரன், 3, அக்கினி.

4} வேள்விகளில் பயன்படுத்தும் மரங்கள்.

வில்வம், ஆல், வன்னி, கருங்காளி, மா, முறுக்கை, அத்தி, பலாசு, சந்தனம், வேங்கை, அரசு, வாகை முதலியன.

5} {தக்ஷிண} தென் கயிலாயம் எனப்படும் தலங்கள்.

திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோண மலை {ஸ்ரீலங்கா} என்பன.

6} எட்டு ஆத்ம குணங்கள்.


1, கருனை, 2. பொறுமை, 3. பொறாமையில்லாமை, 4. நற்செயல், 5. மனமகிழ்வு, 6. பேராசையில்லாமை, 7. உலோபத்தன்மையில்லாமை, 8. தூய்மை.

7} கை விரல்களுக்கு வழங்கப்படும் பெயர்கள்.

1, பெரு விரல் அங்குசம்.
2, சுட்டு விரல் {ஆள்காட்டி விரல்} தர்ச்சனி.
3, நடு விரல் மத்திமா.
4, மோதிர விரல் அநாமிகை.
5, சுண்டு விரல் கனிஷ்டா.

8} நவ பாஷாணங்கள்.

1, சாதிலிங்கம். 2, மனோசிலை. 3, காந்தம். 4, அரிதாரம். 5, கந்தகம். 5, கந்தகம். 6, ரச கற்பூரம். 7, வெள்ளை பாஷாணம். 8, தொட்டி பாஷாணம். 9, கவுரி பாஷாணாம். என்பன. போகர் என்னும் சித்தர் 5.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவரே இந்த நவ பாஷாணகங்களைக் கொண்டு பழனியாண்டவர் மூல விக்கிரகத்தைச் செய்து வைத்தனர்.

9} நவ ரத்தினங்கள்.

1,கோமேதகம். 2,நீலம். 3,பவளம். 4,புஷ்பராகம். 5,மரகதம். 6,மாணிக்கம். 7,முத்து. 8,வைரம். 9,வைடூர்யம்.

10} நவ புண்ணியங்கள்.

1, அமுதம் ஏந்தல். 2, அருச்சித்தல். 3, ஆசனத்திருத்தல். 4, எதிர் கொள்ளல். 5, திருவடி துலக்கள். 6, தீபங்காட்டல். 7, தூபங்காட்டல். 8, பணிதல். 9, புகழ்தல்.

11} பஞ்ச லோகங்கள்.

1, பொன். 2, வெள்ளி. 3, செம்பு. 4, இரும்பு. 5, ஈயம். என்பன.

12} எண்வகை மங்களங்கள்.


1, இணைக்கயல். 2, கண்ணாடி. 3, சாமரம். 4, கொடி. 5, தோட்டி. 6, நிறைகுடம். 7, முரசு. 8, விளக்கு.

13} பஞ்ச பட்சிகள் எனப்படுபவை.

1, வல்லூறு. 2, ஆந்தை. 3, கோழி. 4, காகம். 5, மயில்.

14} பஞ்ச {ஐந்து} திரவியங்கள்.


1, ஏலம். 2, லவங்கம். 3, அதிமதுரம், 4, கோஷ்டம். 5, சம்பக மொட்டு.

15} ஐவகைத் தெய்வ மணிகள்.

1, சிந்தாமணி. 2, சூடாமணி. 3, சூலாமணி. 4, சியந்தாமணி. 5, கௌஸ்துபமணி.

16} பஞ்ச யக்ஞ ஹோமங்கள்.


1, கணபதி ஹோமம் தடங்களின்றிக் காரியங்கள் நடைபெற.
2, சண்டீ ஹோமம் வறுமை பயம் நீங்க.
3, நவக்ரஹ ஹோமம் கிரகங்களைப் பிரியப்படுத்த.
4, சுதர்சன ஹோமம் வெற்றி கிட்ட.
5, ருத்ர ஏகாதச ஹோமம் ஆயுள் விருத்தி, க்ஷேமம் கிட்ட.

17} பஞ்ச பிலவங்கள்.

1, வில்வம். 2, கிளுவைப் பத்திரம். 3, மாவிலங்கை. 4, விளா. 5, நொச்சி.


18} அஷ்ட புஷ்பங்கள்.


1, எருக்கன் மலர். 2, தாமரை. 3, புன்னை. 4, ந்ந்தியாவட்டை. 5, பாதிரி. 6, அரளி. 7, சம்பகம். 8, நீலோற்பலம். { மலர்களை முழுமையாக இட்டுதான் பூசிக்க வேண்டும். பத்திரங்களைக் கிள்ளி பூசை செய்யலாம்.}

19} இறைவனுக்குரிய 16. உபசாரங்கள்.


1, தியானம். 2, ஆவாஹனம். 3, ஆசனம். 4, அர்க்கியம். 5, ஆசமனம். 6, அபிஷேகம். 7, வஸ்த்திரம். 8, சந்தனம். 9, அலங்காரம். 9, அர்ச்சனை. 10, தூபம். 11, தீபம். 12, நிவேதனம். 13, ஆரத்தி. 14, புஷ்பாஞ்சலி. 15, வலம் வரல். 16, பிழை பொறுக்க வேண்டுதல் என்பன.

20} ஐவகை உபசாரங்கள்.


1, கந்தம். 2, புஷ்பம். 3, தூபம். 4, தீபம். 5, நைவேத்தியம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Source:Swarnagiri Vasan