சப்த கோடி மஹா மந்திரங்கள்.

சப்த என்றால் ஏழு என்று பொருள் கோடி என்றால் முடிவு என்றும் பொருள் உண்டு. ஆக ஏழு சொற்களை கொண்டுள்ள உயர்ந்த மந்திரங்கள் சப்த கோடி மஹா மந்திரங்கள் எனப்படும். அம்முடிவுகளாவன:

1,நமஹ
2,ஸ்வாஹா
3,ஸ்வதா
4,வௌஷட்
5,வஷட்
6,பட்
7,ஹும் என்பன ஆகும்.

சிரஞ்சீவிகள் எழுவர்.


1. ஆஞ்சநேயர், 2. விபீஷணன், 3. அசுவத்தாமன், 4.வியாசர், 5. மகாபலி, 6. கிருபர், 7. பரசுராமர்.

சப்த ரிஷிகள்.

1,கௌதமர் 2,பரத்வாஜர் 3,விசுவாமித்திரர் 4,ஜமதக்னி 5,வசிஸ்டர் 6,காசிபர் 7,அத்ரி ஆகியோர்.

சப்த கன்னிகைகள்.

1,அகல்யை 2,சீதை 3,திரௌபதி 4,தாரை 5,மண்டோதரி 6,நளாயினி 7,அருந்ததி.

ஏழு புண்ணிய நதிகள்.

1,கங்கை 2,யமுனை 3,கோதாவரி 4,சரஸ்வதி 5,நர்மதை 6,சிந்து 7,காவேரி.

ஏழு மண்டலங்கள்.

1,சூர்ய மண்டலம் 2,சந்திர மண்டலம் 3,வாயு மண்டலம் 4,வருண மண்டலம் 5,நட்சத்திர மண்டலம் 6,அக்கினி மண்டலம் 7,திரிசங்கு மண்டலம்.

சப்த ஸ்வரங்கள்.

1,ஷட்ஜம் 2,ரிஷபம் 3,காந்தாரம் 4,மத்திமம் 5,பஞ்சமம் 6,தைவதம் 7,நிஷாதம் என்பன.

முப்பத்து முக்கோடி தேவர்கள்.


12 சூரியன், 11 உருத்திரன், 2 அஸ்வினி தேவர்கள், 8 வசுக்கள் ஆக மொத்தம் 33 இம்முப்பத்து மூவரும் ஒவ்வொரு கோடி பரிவாரங்களுடன் இருத்தலால் தேவர்கள் முப்பத்து முக்கோடி என்று எண்ணப்பெற்றனர்.

பதினெண் கணங்கள்.


1.தேவர், 2.அசுரர், 3.தைத்தியர், 4.கின்னரர், 5.கிம்புருடர், 6.இயக்கர், 7.விஞ்சையர், 8.இராக்கதர், 9.கந்தருவர், 10.சித்தர், 11.சாரணர், 12.பூதர். 13,பைசாசர், 14.தாராகணம், 16.நாகர், 17.ஆகாய வாசிகள், 18,போகர் ஆகியோர்.

18.சித்தர்கள்

1,நந்தீசர் 2,அகத்தியர் 3,புலந்தியர் 4,பாம்பாட்டி சித்தர் 5,இடைக்காடர் 6,கோரக்கர் 7,இராம தேவர் 8,சட்டை நாதர் 9,கமலமுனி 10,புண்ணாக்கீசர் 11,காலங்கி சித்தர் 12,போகர் 13,கொங்கனர் 14,கருவூரர் 15,திருமூலர் 16,மச்சமுனி 17,அழுகண்ணர் 18,புலிப்பாணி.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

Source:Swarnagiri Vasan