பெண் குழந்தையின் அப்பாவா நீங்கள்?


Click image for larger version. 

Name:	daughter.jpg 
Views:	7 
Size:	9.8 KB 
ID:	1328

வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறு
வார்கள். அம்மாவுடன் கூட்ட ணி அமைத்துக்கொண்டு அவர் கள் ஒதுங்கிவிடுவதால்
அவர் கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரி யாமல்
போய்விடும்.

பெண் குழந்தை களுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்க ள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர்செலவிடும் நேரம் குறைவு.
ஆங்கிலத் தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார் கள். அதைப்போல முக்கியமான
விஷய ங்களை கேட் டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷய
ங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி
தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது
என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார்
கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை
எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கி யம் அல்லவா?


3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி
மறு க்கப்பட்டது. தற்போது கல்வி யில் பெண்கள் சாதனை செய்கிறார்கள்.
கல்வியில் அவருடைய சந்தேகங்க ளை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

4 ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர் களால் பெண்களுக்கு
ஏற்படும் பிரச்சினைக ளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது
என்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள்.
வாழ்க்கையில் என் னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையு
டன் நீங்கள் அவருக்கு உதவு வது எப்படி என்று திட்டமிடு ங்கள்.


6.கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி
நடந்து கொள்கிறார் கள், ஆண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அவர்
அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை
அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக் கொடு ங்கள்.


7. பெண்களென்றால் வீட்டில் தான் சாப்பிடுவார்கள் என்றில் லை. வித விதமாக நாம்
உண் பதைப்போல் மகளுக்கும் சிற ந்த உணவகங்களுக்கு அழைத் துச்செல்லுங்கள்.
உணவு வகை களை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப்
பறிமாறுகிறார்கள் என்ற விஷ யமெல்லாம் தெரிந்துகொள் ளட்டும்.

8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப் பற்றி எப்படி
பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவுமுக்கியமான நபர் என்பதை
அடிக்கடி உணர்த்துங்கள். இ து அவர்களுக்கு தன்னம்பிக் கையையும் மன உறுதியை
யும் கொடுக்கும்.

9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு
எடுத்துச்சொல் லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொ ர்களின்
சிறப்புக்களை யும் பற்றி அவர் அறியட்டும்.

10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப் படி, எங்கு படித்தீர்கள், உங்க ள்
இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்
தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெ
ளிவாக சொல்லுங்கள்


11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை
மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தக ங்கள் படிக்கும் பழக்கத்தை இளம்
வயதிலேயே பழக்கப்படுத்துங்க ள். வீட்டில் புத்தகங்களை சேர் த்து சிறு
நூலகமாக உருவாக் குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டு வந்து
கொடுங்கள்.

12. உடலளவிலும் மனதளவி லும் பலசாலியாக உருவாக்கு ங்கள்.
எந்த மாதிரி பிரச்சி னைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று
சொல்லிக்கொடுங்கள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை
சிறு பிரச்சினை களுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வர வேண்டும்
என்று காத்திரு க்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடு வது, வண்டி டயரை
மாற்றுவது, போன் ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.


14. இவை எல்லாவற்றையும் விட நீங் கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வா ழுங்கள். உங்களைப்
பற்றி உங்கள் மகள் பெருமைப் படட்டும்.

உங்கள் மனைவி யை மதியுங்கள். உங்கள்
மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செய
ல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல் வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்.


Source:Swarnagiri Vasan