ஈசன் உபதேசம்...Click image for larger version. 

Name:	Isan.jpg 
Views:	5 
Size:	37.8 KB 
ID:	1332

1, ஓமாம்புலியூர் தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

2, உத்திரகோசமங்கை பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

3, இன்னம்பர் அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

4, திருவுசாத்தானம் இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

5, ஆலங்குடி சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

6, திருவான்மியூர் அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

7, திருவாவடுதுறை அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

8, சிதம்பரம் பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.

9, திருப்பூவாளியூர் நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
10, திருமங்களம் சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

11, திருக்கழு குன்றம் சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

12, திருமயிலை 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.

13, செய்யாறு வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

14, திருவெண்காடு நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.

15, திருப்பனந்தாள் அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

16, திருக்கடவூர் பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

17, திருவானைக்கா அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

18, மயிலாடுதுறை குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

19, திருவாவடுதுறை அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

20, தென்மருதூர் 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.

21, விருத்தாசலம் இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.

22, திருப்பெருந்துறை மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.

23, உத்தரமாயூரம் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

24, காஞ்சி ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

25, திருப்புறம்பயம் சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

26, விளநகர் அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.

27, திருத்துருத்தி சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.

28, கரூர் ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

29, திருவோத்தூர் ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்.

Source:Swarnagiri Vasan

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends