பச்சரிசி:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Click image for larger version. 

Name:	Pacharisi.jpg 
Views:	7 
Size:	36.1 KB 
ID:	1333

உணவு வகைகளிலேயே சைவம், அசைவம் என்று உள்ளது போல் காய்கறிகளில் கூட அசைவம், சைவம் என்று முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர்.
அந்த வகையில் தேன், ரத்தத்திற்கு இணையானது என அதர்வண வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. ரத்தத்தை வழங்க முடியாதவர்கள் தேனை வழங்கி அதற்குண்டான பலனைப் பெற முடியும். ஹோம குண்டங்களில் தேன் வார்ப்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதேபோல் பேரிச்சம்பழம், மாமிசத்திற்கு சமம் என்றும் பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பச்சரிசி மிகவும் சக்தி வாய்ந்தது. திருமணத்தின் போது முனை முறையாத பச்சரிசியைத்தான் அட்சதைக்காக பயன்படுத்த வேண்டும். இதனைக் கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர். எனவே கடைகளில் பச்சரிசி வாங்கி வந்து அட்சதை தயார் செய்வது கூடாது. மாறாக விவசாயிகளிடம் சென்று அறுவடையின் போது சேகரித்து வைத்த முனை முறியாத பச்சரிசியை வாங்கி வந்து அட்சதை தயாரிப்பதுதான் சரியான முறையாகும்.

கைக்குத்தல் அரிசியைத்தான் தானமாக வழங்கவும் பயன்படுத்த வேண்டும். ஞானத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களுக்கு பச்சரிசியை தானமாக வழங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். இதற்கு காரணம் பச்சரிசிக்கு என்று தனி மகத்துவம் உள்ளது. புழுங்கல் அரிசி போல் அதை அவிப்பதில்லை.

எனவே, முனை முறியாத பச்சரிசியை உயர்ந்தவர்களுக்கு தானமாக வழங்கினால் அதைக் கொடுப்பவருடைய தோஷங்கள் அனைத்தும் கழிந்துவிடும் என்று பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பூஜைகளுக்கு வாழைப்பழம் (கதளி) பயன்படுத்த வேண்டும். கேரளாவில் பகவதி அம்மன் கோயில்களில் கதளி இல்லாமல் பூஜைகள் நடத்தப்படாது. பச்சை வாழை, கற்பூர வாழை என பல்வேறு வகையான வாழைகளை பூஜைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்களும், பலன்களும் உள்ளது.

குறிப்பாக பச்சை வாழையை வன/காவல் தெய்வங்களுக்கும், பூவன் வாழையை வீட்டு தெய்வங்களுக்கும் பூஜை செய்ய பயன்படுத்தலாம்.வாழைக்காய்/பழங்களை கைகளால் தொட்டு அந்தணர்களுக்கு வழங்கும் போது கொடுப்பவருக்கு உள்ள கர்ம வினைகள் பாதி தீர்ந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னோர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது கூட வேதம் ஓதும் அந்தணர்களுக்கு வாழைக்காய்/பழம் மற்றும் பச்சரிசி வைத்து வழங்குவர்.

இது சம்பந்தப்பட்ட வீடு (உயிரிழந்தவர்) மற்றும் அதில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் தோஷத்தைப் போக்கவே. அந்தணர்களும் அவற்றை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுடைய தோஷத்தை ஏற்றுக் கொண்டு அதை கழிப்பதாகவே பழங்காலத்தில் கருதினர்.

பழங்காலத்தில் ஒரு ஊரில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கு ஏற்படும் தோஷத்தை கழிக்கவே அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். அதற்காக மக்களிடம் இருந்து எதையும் அவர்கள் எதிர்பார்த்ததில்லை. மாறாக அந்நாட்டின் அரசன் அந்தணர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள், செல்வங்களையும் அளித்ததாக வரலாறுகள் எடுத்துரைக்கின்றன.

எனவே, முனை முறியாத பச்சரிசி, வாழைப்பழம் ஆகியவற்றிற்கு பல பூர்வீக குணங்கள் உண்டு. முக்கியமான சில பூஜைகளின் போது; கலச பூஜை உட்பட முனை முறியாத பச்சரிசியை பயன்படுத்தப்படுவதை தற்போதும் பார்க்கிறோம்.

கோயில்களில் நெய்வேத்தியம் செய்ய முழுக்க முழுக்க பச்சரிசியே பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் மாக்கோலம் இடுவதற்கும் பச்சரிசியை பயன்படுத்தினால் தெய்வீகத்தன்மை கிடைக்கும்.

அட்சய திருதியை தினத்தன்று முனை முறியாத பச்சரிசியை வாங்குவதும், தானமாக வழங்குவதன் மூலமும் லட்சுமியின் அருளைப் பெற முடியும்.


Source:Religious history of hinduism