Announcement

Collapse
No announcement yet.

ராணி புகட்டிய ஞானம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராணி புகட்டிய ஞானம்

    ராணி புகட்டிய ஞானம்


    ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார்.

    அந்த ராஜாக்கு ஒரு ராணி.

    அவர்களின் அரண்மனைக்குப் பெரிய ஞானிகளெல்லாம் வருவது வழக்கம்.

    அந்த ஞானிகளின் உபதேசங்களையெல்லாம் ராணி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

    அதன் விளைவாக அவளும் ஒரு ஞானி ஆகிவிட்டாள்.

    ஞானி மட்டும் இல்லை... தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொண்டு ஆகாயத்தில் பறக்கும் சித்தியும் அவளுக்குக் வந்தது.

    நினைத்தால் பறக்கலாம்.. அப்படிப்பட்ட சக்தி அவளுக்கு வந்துவிட்டது.
    ராஜா பார்த்தார். உடனே ராணியிடம் போனார்.

    இதோ பார்! நானும் உன்னைப் போல ஒரு ஞானி ஆகவேண்டும் எனக்கு ஏதாவது உபதேசம் செய்யேன்!” என்று கேட்டுக்கொண்டார்.

    அதற்கு ராணி, “ நீங்கள் ஞானி ஆக வேண்டுமானால் எல்லாவற்றையும் துறப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். எல்லாவறையும் விட்டுவிடும் அளவுக்கு இன்னும் உங்களுக்கு வைராக்கியம் வரவில்லை” என்று சொல்லிவிட்டாள்.

    சரி என்று பேசாமல் இருந்துவிட்டார் ராஜா.

    கொஞ்ச காலம் ஆயிற்று.

    அந்த ராஜா காட்டுக்குச் சென்று தவம் பழக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ராணிக்கு அதில் இஷ்டமில்லை ஆதலால் அவள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

    ராஜா பார்த்தார். அவருக்கா வழி தெரியாது?

    சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் இரவு புறப்பட்டு காட்டுக்குச் சென்றுவிட்டார்.

    ராணி பார்த்தாள்.

    அதுதான் ஆகாயத்தில் பறக்கும் சித்தி அவளுக்கு ஏற்கனவே கிடைத்திருக்கிறதே! இளம்முனிவர் போன்று தன் உருவத்தை அவள் மாற்றிக்கொண்டாள். புறப்பட்டுக் காட்டுக்குப் பறந்து போனாள். ராஜா எங்கே இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டாள்.

    நேராக ராஜாவுக்கு முன்னால் போய் இறங்கினார் இந்த இளம் முனிவர்- அதுதான்-ராணி.

    ராஜா தன் எதிரில் இளம் முனிவரைப் பார்த்தார். வணங்கினார்.

    “தான் நீண்ட காலமாகத் தவம் செய்து வருகிறேன். ஆனால் மன நிம்மதி எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. தாங்கள்தான் அருள் புரிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

    அதற்கு அந்த இளம் முனிவர், “எல்லாவற்றையும் துறங்க வேண்டும் என்று உங்கள் மனைவி ஒரு சமயம் உங்களுக்கு உபதேசம் செய்தாளே! அதன்படி எல்லாவற்றையும் விட்டு விட்டீர்களா?” என்று கேட்டார்.

    எல்லாவற்றையும் விட்டு விட்டேன். இன்னும் இந்த ஆசிரமத்தைதான் துறக்கவில்லை!” என்று சொல்லிக்கொண்டே அந்த ராஜா ஆசிரமத்தில் இருந்த ஒவ்வொரு பொருளாக எடுத்து அக்கினியில் போட்டார்.

    “ இப்போது நீங்கள் போடுகிறீர்களே... இந்தப் பொருள்களெல்லாம் உங்களுக்குச் சொந்தம் இல்லையே...! இவையெல்லாம் பிரகிருதிக்கு {இயற்கைக்கு} அல்லவா சொந்தம்?” என்று இளம் முனிவர் வினவினார்.

    சரி... அப்படியானால் என்னுடைய உடம்பை நான் துறக்கிறேன்” என்றார் ராஜா.

    இப்படி சொல்லிவிட்டு நெருப்பில் அவர் குதிக்கப் போனார்.

    உடனே இளம் முனிவர் ராஜாவைத் தடுத்து நிறுத்த், உடம்பும் உங்களுக்குச் சொந்தம் இல்லையே! அதெல்லாம் பஞ்ச பூதங்களுக்கு அல்லவா சொந்தம்!” என்று கேட்டார்.

    ராஜா யோசித்தார்.

    “அப்படியானால் எனக்கு என்னதான் சொந்தம்?” என்று கேட்டார்.

    உங்களுடைய அகங்காரம்தான் உங்களுக்கு சொந்தம். நீங்கள் துறக்க வேண்டியது அதைதான். முதலில் அதை விடுங்கள்! அது உங்களிடம் இருப்பதால் இந்த உலகமே உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்! அகங்காரம் இருப்பதால்தான் இந்த உலகப் பொருள்கள் உங்களுக்குத் சொந்தம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது!” என்று இளம்முனிவர் உருவத்தில் இருந்த ராணி சொன்னாள்.

    உடனே, “இதோ என்னிடம் இருக்கும் அகங்காரத்தை விட்டுவிட்டேன்!” என்றார் ராஜா.

    அதற்கு பிறகுதான் அந்த ராஜாவும் ஞானி ஆனார். ராணிக்கு கிடைத்தது போன்ற சித்தி அவருக்க்கும் கிடைத்தது.




    Moral: Leave your Ego


    source: Swarnagiri Vasan
Working...
X