வராஹமிஹிரர் என்பவர் யார்?
-------------------------------------------


Click image for larger version. 

Name:	varahi.jpg 
Views:	11 
Size:	10.8 KB 
ID:	1359


*பண்டைய பாரதத்தில் அபூர்வ நகரமாக விளங்கியது உஜ்ஜயினி. இந்த நகரைப் பற்றிய ஏராளமான அதிசயக்கத்தக்க உண்மைகள் உள்ளன. காலம் பிறப்பது இங்கே தான் என்பது முதல் ரகசியம். சூரிய பாதையில் தீர்க்கரேகை செல்லும் ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது உஜ்ஜயினி.இந்த நகரில் ஆதித்ய தாஸர் அந்தணருக்கு மகனாக பிறந்தவர்.

*வராஹமிஹிரர் என்பவர் ஒரு அதிசய ஜோதிட மேதையாவார்.இவர் ஜோதிட சாஸ்திரத்திலும்,வான்வியல் சாஸ்திரத்திலும் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்.

*இவர் உலகமே வியந்த ஆர்ய பட்டரின் சீடரவார் . சூரியனை நன்கு வழிபட்டு வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை கற்றுணர்ந்தார் .

*உஜ்ஜயினி நகரத்தை ஆண்டுவந்த விக்ரமாதித்தன் அரசவையில் நவரத்தினங்களாக பெரும் அறிஞர்கள் ஜொலித்தனர். அந்த நவரத்தினங்களுள் ஒருவர் வராஹமிஹிரர்.

*வராஹமிஹிரர் என்ற பெயர் வரக்காரணம் என்றவென்றால் அரசர் விக்ரமாதித்தர்.தனக்கு குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தை இவரிடம் கணிக்கசொன்னார்.அரசரின் மகன் சரியாக 18 வயதில் பன்றியினால் இறந்துவிடுவார் என சொன்னார்.எல்லாவித பாதுகாப்பும் கொடுத்தாலும் அரசரின் மகன் சரியாக பன்றி உருவம் படைத்த கொடியினால் 18 வயதில் இறந்துவிடுவார்.அதனால் இந்த பெயர் வந்தது.வராகம் என்றால் பன்றி என்ற அர்த்தமும் உண்டு.

*வராஹமிஹிரர் ஜோதிடக் கலையை தனது கூரிய அறிவின் மூலமாக ஒரு உன்னதமான ஸ்தானத்தில் ஏற்றி வைத்தார்.அவர் இயற்றிய பல நூல்கள் இன்றும் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக விளங்குகின்றன. நவீன விஞ்ஞானிகளே மலைக்கும் அவரது கணித அறிவும், வானியல் அறிவும் பிரமிக்க வைப்பவையாகும்.

*வராஹமிஹிரர் எழுதியுள்ள பல நூல்களில் ப்ருஹத் ஜாதகம், ப்ருஹத் சம்ஹிதா, யோக யாத்ரா, பஞ்ச சித்தாந்திகா, ப்ரஸ்ன வல்லபா, லகு ஜாதகா ஆகியவை மிக முக்கியமானவை. இவரது நூல்கள் இவர் ஒரு ரிஷி மட்டுமல்ல. ஒரு சிறந்த விஞ்ஞானியும் கூட என்பதை நிரூபிக்கின்றன.

*நியூட்டன் பின்னால் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றிக் கூட வராஹமிஹிரர் நன்கு விளக்கி இருப்பது பிரமிக்க வைக்கும் விஷயமாகும். புவி ஈர்ப்பு விசையை அவர் குரு த்வ ஆகர்ஷண் என்று குறிப்பிடுகிறார்.

*சில கணித சூத்திரங்களையும் இவரே உலகுக்கு முதலில் அறிவித்துள்ளார்.

*1500 வடங்களுக்கு முன் வாழ்ந்த வராஹமிஹிரர் ஜோதிடம் ஒரு விஞ்ஞான கலை என்று நிருபித்தவர்.82 வயது வரை உயிர் வாழ்ந்தவர்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends