Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 065/100 எட்டெழுத்தும் கற்றார் க&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 065/100 எட்டெழுத்தும் கற்றார் க&

    3. அழகர் அந்தாதி - 065/100 எட்டெழுத்தும் கற்றார் கலங்கார் ;ஆகுவர் வானவரே !

    அலங்காரன், சுந்தரத்தோளன் , அழகன் , அணிமுடியில்
    இலங்காரன் , ஏறு திருவுடையான் - எட்டெழுத்தும் கற்றார்
    கலங்காரனங்கன் கணையால் : எச்செல்வமும் காதலியார் ;
    மலங்காரருந்துயர்மேவினும் ; ஆகுவர் வானவரே

    வுரை : இலங்கு + அரன்
    கலங்கார் + அனங்கன்
    மலங்கார் + அரும் + துயர்

    அலங்காரன் சுந்தரத்தோளன் அழகன் அலங்காரன் சுந்தரத்தோளன் அழகன் என்று பெயர் உடையவனும்
    அணிமுடியில் அழகிய முடியில்
    இலங்கு அரன் விளங்கும் பூமாலையை உடையவனும்
    ஏறு திரு உடையான் மார்பில் ஏறி உட்கார்ந்த திருமகளை உடையவனுமானவனின்
    எட்டெழுத்தும் கற்றார் அஷ்டாக்ஷரத்தை முறைப்படி கற்றவர்கள்
    அனங்கன் கணையால் கலங்கார் மன்மதனுடைய அம்புகளால் கலங்க மாட்டார்
    எச்செல்வமும் காதலியார் எந்த செல்வத்தையும் விரும்ப மாட்டார்
    அருந்துயர் மேவினும் மலங்கார் மிகுந்த துன்பம் வந்தாலும் கலங்க மாட்டார்
    வானவர் ஆகுவரே ஸ்ரீ வைகுண்டத்தை அடைவார்







    Last edited by sridharv1946; 04-10-13, 18:45.
Working...
X