Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 066/100 மீ நவதாரம் முதலானவை அவன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 066/100 மீ நவதாரம் முதலானவை அவன்

    3. அழகர் அந்தாதி - 066/100 மீ நவதாரம் முதலானவை அவன் இச்சை ! இதை அறிந்தால் முக்தி !

    வாநவதாரணி சுந்தரத்தோளன் ; முன் மாவலியை ,
    தாநவதாரணி தா என்ற மாயன் ; தராதலத்து
    மீ நவதாரம் முதலானவை வினை இன்றி , இச்சை
    ஆநவதார் அறிவார் அவரே முத்தராமவரே



    பதவுரை : வால் + நவ + தார் + அணி
    தானவ + தாரணி
    மீன் + அவதாரம்
    ஆன + அது + ஆர்

    வால் நவ தார் அணி ஒளியுள்ள புதிய மாலையைத் தரித்த
    சுந்தரத் தோளன் அழகிய தோள்களை உடையவனும் ,
    முன் மாவலியை முன்பு மகாபலியிடம்
    தானவ தாரணி தா "அசுரனே ! நிலத்தைக் கொடு "
    என்ற மாயன் என்று இரந்த , ஆச்சரிய குணம் உடையவனுமான நாராயணன்
    தராதலத்து பூமியில் எடுத்த
    மீன் அவதாரம் முதலானவை மச்சாவதாரம் முதலியவைகள்
    வினை இன்றி கர்மவசத்தால் அல்லாமல்
    இச்சை ஆன அவனது சங்கல்ப மாத்திரத்தாலேயே என்ற
    அது ஆர் அறிவார் உண்மையை யார் அறிவார்களோ
    அவரே முத்தர் ஆம் அவரே அவர்களே முக்தி பெறுபவர் ஆவார்



Working...
X