வீட்டில் துளசி வளர்ப்பது ஏன்?
-----------------------------------------------Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsClick image for larger version. 

Name:	Thulasi.jpg 
Views:	9 
Size:	11.4 KB 
ID:	1367


தாவர வகைகளிலேயே துளசி மிகவும் சக்தி வாய்ந்த தாவரமாகும்.துளசி மற்ற தாவரங்களை விட அதிகமாக ஆக்ஸிஜனை வெளிடும் தன்மை கொண்டது.காற்று மண்டலத்தை சுத்தபடுத்தும் தன்மை கொண்டது.இதை வீட்டில் வளர்ப்பதால் நமக்கு ந்ல்ல காற்றும்,உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது.

இந்து சாஸ்திரங்களிலும் துளசியை மிகவும் மகத்துவமாக கூறப்பட்டுள்ளது.கிருஷ்ண பரமாத்மாவுக்கு மிகவும் பிடித்தது துளசியாகும்.தெய்வத்திற்கு படைக்கும் பூக்களோ,செடிகளோ புதிதாக இருக்கவேண்டும் ஆனால் துளசியை பொருத்தவரை ஒரு வாரமானாலும் தெய்வத்திற்கு வைத்து பூஜிக்கலாம்.

துளசியின் பெருமையை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக க்ருஷ்ணர் ஒரு நாடகமாடினார்.ஒருசமயம் சத்தியபாமா, கிருஷ்ணன் தன்னைவிட்டுப் பிரியாமல் இருக்க என்ன செய்யலாம்? என்று நாரதரிடம் கேட்க, நாரதர் நீ யாருக்காவது கிருஷ்ணனை தானமாகக் கொடுத்துவிடு. அதன்பின் நீ திரும்பி அவர்களுக்கு பொருள் கொடுத்து வாங்கிக்கொள் என்றார்.

சத்தியபாமாவும், உத்தமரான உமக்கே கிருஷ்ணரை தானமாகத் தந்தோம் என்று கூறி நாரதருக்கே கிருஷ்ணரை தானமாகக் கொடுத்தாள்.அதன்பின் நாரதர் கிருஷ்ணருக்குப் பதிலாக அவரது எடைக்கு எடை நவரத்தினங்களையும் தங்கத்தையும் தனக்குக் கொடுக்கும்படி கேட்டார். தராசில் எவ்வளவு செல்வங்களை வைத்தபோதும் கிருஷ்ணன் இருந்த தட்டுதான் இறங்கி இருந்தது. அங்கு வந்த ருக்மிணி தேவி, இதற்கு என்ன செய்வது? என்று நாரதரிடம் வருத்தத்துடன் கேட்டாள்.

விலைமதிப்பில்லாத பொருளை இரண்டாவது தட்டில் வைத்தால் கிருஷ்ணர் இருக்கும் தட்டு சமநிலைக்கு வரும் என்றார்.ருக்மிணிதேவியும் க்ருஷ்ணார்ப்பணம் என்று துளசி தளத்தைக் கொண்டு வந்து இரண்டாவது தட்டில் வைத்தாள். தராசின் இரண்டு தட்டுக்களும் நேராயின. துளசியின் மகிமை அனைவருக்கும் புரிந்தது.

அதேபோல் துளசிக்கு ஏகப்பட்ட மருத்துவகுணங்களும் உண்டு.துளசி இலையை பறித்து, அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி தொந்தரவுகள் குறையும்.

வீட்டில் துளசி மாடம் வைத்து துளசியை பூஜிப்பது விசேஷம். செவ்வாய், வெள்ளி அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய 4 மணியிலிருந்து 6 மணிக்குள் விசேஷமாக பூஜிக்கலாம்.

துளசி இலையை நகங்களால் கிள்ளக்கூடாது.

அமாவாசை, பௌர்ணமி, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, கிரஹண காலங்கள், மதியம் மற்றும் மாலைப்பொழுது, இரவு போன்ற காலங்களில் துளசி இலையைப் பறிப்பது கூடாது.

சுமங்கலிப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

துளசிச் செடி துஷ்ட சக்திகளை வீட்டினுள் அனுமதிக்காது.

துளசியைப் பூஜிப்பவர் வீட்டில் மஹாலக்ஷ்மி நித்யவாசம் செய்கிறாள்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.