அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், குருவித்துறை - 625 207 வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான்வழி, மதுரை மாவட்டம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsகாலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.

Click image for larger version. 

Name:	Vallapa Perumal.jpg 
Views:	4 
Size:	6.0 KB 
ID:	1369Click image for larger version. 

Name:	Thayar.jpg 
Views:	4 
Size:	4.5 KB 
ID:	1370

சித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர். வியாழன் (குரு) தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது.குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.வியாழனே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு(வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் என்றும், புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.