Announcement

Collapse
No announcement yet.

தஞ்சாவூர் வரலாறு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தஞ்சாவூர் வரலாறு

    தஞ்சாவூர் வரலாறு



    நம் ஊர் பெயர் வரவதற்கு காரணம் என்ன ?

    பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை.

    முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை பராசக்தி வதம் செய்தல் அவன் ரத்தம் சோட்ட சோட்ட அவன் பல கோடி உருவம் எடுத்தான் பராசக்தியும் கோடி உருவம் எடுத்து அவனை வதம் செய்தால் என்று கூறப்படுகிறது. ,ந்த ஊரில் கோடியம்மன் என்ற திருபெயருடன் உள்ளாள். மற்றோறு புறம் தஞ்சனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது.

    வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயில் , கோடியம்மன் கோயிலும் நேரெதிரில் உள்ளது. ,தில் எது உன்மை சம்பவம் என்று புரியாத புதிர்ராக உள்ளது.

    தஞ்சாவூர் எட்டாம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

    தஞ்சையை ஆட்சி செய்தவர்கள்:-
    முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். கி.பி. 850இல் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விஜயாலயன் கைப்பற்றித் தஞ்சைச் சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தார். இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் (985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது.

    இராஜராஜ சோழனின் மகனரான இராசேந்திர சோழன் கி.பி. சுமார் 1025இல் தனது கலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.

    பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது.கி.பி. 1532இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர்மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது.

    கி.பி 1676-ல் மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி (1798-1832) ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிற மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன.

    இரண்டாம் சிவாஜி (1832-1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால்இ ஆங்கிலேயர்கள் வசம் கி.பி. 1856ல் தஞ்சைக் கோட்டையும் வந்தது.

    தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வருகிறது.

    http://www.hellothanjavur.com/mycity/thanjavur-history/
Working...
X