Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 067/100 ஆம் அவரைப் பணித்து ஆள்வா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 067/100 ஆம் அவரைப் பணித்து ஆள்வா

    3. அழகர் அந்தாதி - 067/100 ஆம் அவரைப் பணித்து ஆள்வார் அழகர் !

    ஆமவரைப்பணித்து ஆள்வார் அழகர் , அயன் , உமையாள்
    வாமவரைப்பணியான் , பணிபாதத்தை வாழ்த்தும் ; கொங்கை
    ஏமவரைப்பணி பூணாள் ; சந்து , ஏந்திழையாள் உரைத்தால் ,
    வேமவரைப்பணியாதே எனும் - எங்கள் மெல்லியலே


    பதவுரை : ஆம் + அவரை + பணித்து (அடிமை கொண்டு)
    வாம + அரை + பணியான் (பாம்பு)
    ஏம + வரை + பணி (ஆபரணம் )
    வேம் + அவரை + பணியாதே (சொல்லாதே)

    அயன் பிரமனும் ,
    உமையாள் வாம இடப்பக்கத்தில் பார்வதியையும் ,
    அரைப் பணியான்இடையில் பாம்புக் கச்சையையும் உடையவனான சிவனும்
    பணி வணங்கும்
    ஆம் அவரைப் பணித்து அனுகூலமாய் வருகிறவர்களை அடிமை கொண்டு
    ஆள்வார் அழகர் ஆள்பவராகிய அழகருடைய
    பாதத்தை பாதங்களை
    எங்கள் மெல்லியலே மென்மையான எங்கள் பெண்
    வாழ்த்துவாள் வணங்குவாள்
    ஏம வரை கொங்கை ஊடலினால், பொன் மலை போன்ற தனங்களின் மீது
    பணி பூணாள் ஆபரணங்களை அணிய மாட்டாள்
    சந்து ஏந்திழையாள்ஆபரணம் அணிந்த தோழி
    உரைத்தால் சமாதானமாக வார்த்தை உரைத்தால்
    வேம் உள்ளமும் உடலும் தவிப்பாள்
    அவரைப் பணியாதே எனும் "அழகரைப் பற்றிப் பேசாதே" என்று கூறுவாள்


    V.Sridhar

    Last edited by sridharv1946; 07-10-13, 13:54.
Working...
X