திருச்சி: அரசு கொடுக்கும் பென்ஷன் பணத்துக்காக, ஏழு ஆண்டுகளாக, மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற அலுவலர், தொடர்ந்து பணியாற்றி வருவது, அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை பெற்றுள்ளது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
திருச்சி, மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில் வசிப்பவர், கோபாலன், 65; இவரது மனைவி ரமா. இவர்களது இரு பெண்களுக்கும், திருமணம் ஆகிவிட்டது. 1972ல், தமிழக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக, மயிலாடுதுறையில் பணியில் சேர்ந்தார். கடந்த, 1976ல், உதவியாளராக பணி நிரந்தரம் செய்யப்பட்டு, 1982ல், உதவி வணிக ஆய்வாளராக, திருச்சி, மன்னார்புரம், மின்வாரிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.

வணிக ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர், 2006 ஜன., 31ல், ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற அடுத்த நாளே, வழக்கம் போல், அலுவலகம் வந்த அவரை பார்த்து, ஓய்வு பெற்றதை மறந்து வந்து விட்டாரோ என, அலுவலக ஊழியர்கள் நினைத்தனர். ஆனால், கோபாலனோ, "சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனக்கு, இனி, அரசு பென்ஷன் தரப் போகிறது. அந்த பென்ஷனுக்காக, வேலை பார்க்க போகிறேன்' எனக் கூறி, அனைவரையும் அதிர வைத்தார். வாயடைத்து போன அதிகாரிகள், அவரது நேர்மையைக் கண்டு, அங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதித்து வருகின்றனர்.

ஏழு ஆண்டுகளாக பணியாற்றும் கோபாலனின் பணி, அந்த பிரிவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக, உடன் பணிபுரிவோர் கூறுகின்றனர். பார்ப்பதற்கு, 45 வயது போல் தோற்றமளிக்கும் கோபாலன், 1982 முதல், இன்று வரை, ஸ்ரீரங்கத்திலிருந்து தினமும், 20 கி.மீ., தூரம், சைக்கிளில் தான் வேலைக்கு வந்து செல்கிறார்.

கோபாலன் கூறியதாவது:


Click image for larger version. 

Name:	Gopalan.jpg 
Views:	8 
Size:	23.2 KB 
ID:	1379
பணியில் இருந்த போது, அரசு சம்பளம் கொடுத்தது; ஓய்வு பெற்றதும், பென்ஷன் கிடைக்கிறது. சாப்பாடு போடும் அதை, சும்மா இருந்து பெற மனமில்லை என்பதால், அதே வேலையை தொடர்ந்து செய்கிறேன். ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு வருவது, சலிப்பை ஏற்படுத்தவில்லை. என் உடம்பில் தெம்பு உள்ளவரை, பணிக்கு வருவேன்; சாகும் வரை வேலைக்கு வர ஆசை தான். அதற்கு கடவுள் தான் அருள்புரிய வேண்டும். ஓய்வுக்கு பின் வேறு பணிகளுக்கு அழைப்பு வந்தது; ஆனால், அதை நான் ஏற்கவில்லை. திட்டமிட்டு வாழ்க்கை நடத்தினால், சிரமம் வராது. இவ்வாறு, அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=805098