பிரகஸ்பதி கொடுத்த வரம்

மஹா பெரியவா.....

இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது.அரிசி மூட்டை என்ன விலை?

நம்ப நிலத்துல வெளஞ்சது ஸ்வாமி! ரொம்ப உயர்ந்த ரகம்.. உங்களைப் போல் மகான்கள் சாப்பிடற விஷயத்துல நான் மத்தவாளை நம்பறதில்லே.. காய்கறிகளும் அப்படித்தான். ஒரு சொத்தை,அழுகல் இல்லாம நானே பார்த்து வாங்கினேன். மளிகை சாமானும் அப்படித்தான்..முதல் தரம்!

மௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மகான்.அவன் பேசி முடித்ததும் அது போலத்தான் அர்ச்சனை பூக்களும், வில்வத்திலேயும், துளசியிலேயும். எத்தனை ஓட்டை தெரியுமா! நெறைய அழுகல் பூ இருந்தது. இவன் வீட்டு அர்ச்சனையில் தோஷமுள்ள பூக்கள்தான் இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா? தேவதைகள் நம்ப வேண்டாமா? பகவானோட நெருக்கத்தை நாடறவா எல்லாத்திலேயும் கவனமா இருக்கணும் என்றார்.

வாழ்க்கையிலே முன்னேற எத்தனையோ பேர் உதவி செய்யறா.. அவாளுக்கு கிரகங்களும் நிறைய உபசரணை பண்றா.

ஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காத்தும், நித்திய கர்மாக்களுக்கு மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம் உபசரிக்க நேரமில்லாமப் போயிடறது. சிரமம் வந்தாதான் பகவானை நினைக்கறதுங்கிறதை மாத்திக்கணும்.

வீட்டுலே யாருமே இல்லேபொழுது போகலே..ன்னு தவிக்கற நேரங்கள்லே, பகவானண்டே உட்கார்ந்து காதுக்கு இனிமையா நாலு ஸ்லோகம், பாட்டு சொல்லுங்களேன். மனசு எத்தனை விச்ராந்தியாறதுன்னு புரியும்.

தகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன், வேளா வேளைக்கு அன்னமும், கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது மட்டும் ரட்சணை இல்லை. அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுக்களை தினமும் ஒரு அரைமணி சம்பாஷிக்கணும். அப்படிப்பட்டவனை பிரம்மா
ஆசிர்வாதம் பண்றார்.

தாயார், குடி இருந்த கோவிலில்லையா? இதேபோல அன்பாய் இருக்கிறவனுக்கு அடுத்த பிறவியில் பூமி சொந்தமாய் அனுபவிக்கும் போகம் கிடைக்கும். ஏன்னா பூமி தேவி அப்படி அனுக்ரஹம் பண்றா.

குருவை மரியாதையா நடத்தறவனுக்கு,மத்தவாளுக்கு படிக்க ஒத்தாசை பண்றவாளுக்கு,அடுத்த பிறவியில் படிப்பு நன்றாக வரும். பிரகஸ்பதி அப்படி வரம் கொடுத்திருக்கார்.
Source:Varagooran Narayanan

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends