Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 071/100 வையம் காப்பவர் சோலை மா மī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 071/100 வையம் காப்பவர் சோலை மா மī

    3. அழகர் அந்தாதி - 071/100 வையம் காப்பவர் சோலை மா மலை மாதவரே !

    அளப்பதுமங்கையில் நீர் ஏற்பதும் , தந்து அளிப்பதும் , பின்

    பிளப்பதுமங்கு ஐயில் வெண்கோட்டில் கொள்வதும் , பேர் உணவாக்-
    கிளப்பதுமங்கை எனத் தோள் புணர்வதும் , கேட்கில் வையம்
    வளப்பதுமங்கையம்சேர் சோலை மா மலை மாதவரே





    பதவுரை : அளப்பதும் + அம் + கையில்
    பிளப்பதும் + அங்கு + அயில்
    கிளப்பதும் + மங்கை
    வள + பதுமம் + கையம்


    வளப் பதுமம் கையம் சேர் செழிப்பான தாமரை மலர்கள் தடாகங்களில் இருக்கும்
    சோலை மா மலை மாதவரே திருமாலிருஞ்சோலைமலையில் இருக்கும் அழகர்
    அளப்பதும் காலினால் அளப்பதும்
    அம் கையில் நீர் ஏற்பதும் அழகிய கையில் தாரை வார்க்கும் நீரை ஏற்பதும்
    தந்து அளிப்பதும் முதலில் படைத்தும் , பின்பு காப்பதும்
    பின் பிளப்பதும் இறுதியில் அழிப்பதும்
    ஐயில் வெண் கோட்டில் கொள்வதும் கூரிய வெண் கோரைப் பற்களால் குத்தி எடுப்பதும்
    பேர் உணவாக் கிளப்பதும் சிறந்த உணவாகச் சொல்வதும்
    மங்கை எனத் தோள் புணர்வதும் மனைவியாகத் தோள்களைத் தழுவுவதும்
    கேட்கில் எதனை என்று கேட்டால்
    வையம் பூமி என்பது பதில் ஆகும்

    --
    V.Sridhar


Working...
X