Brahminsnet.com - Forum - Powered by vBulletin
Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 1 of 1

Thread: 3. அழகர் அந்தாதி - 073/100 அலங்காரர் அந்தரங்கத் து

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Moderator Crown sridharv1946's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai Medavakkam
    Posts
    1,448
    Downloads
    1
    Uploads
    0
    Rep Power
    229
    Font Size

    Default 3. அழகர் அந்தாதி - 073/100 அலங்காரர் அந்தரங்கத் து



    3. அழகர் அந்தாதி - 073/100 அலங்காரர் அந்தரங்கத் துயர் தீர்க்க உலாவுவரே !

    அரியவரந்தந்து , அயன் முதலோர்க்கு அருள் செய்து ; அவரைப்-
    பெரியவரந்தம் இல் வாழ்வினர் , ஆக்கி ; தம் பேர் அருளால்
    கரியவரந்தணர் கை தொழும் மால் அலங்காரர் - வையத்து ,
    உரியவரந்தரங்கத் துயர் தீர்க்க உலாவுவரே

    பதவுரை : அரிய + வரம் + தந்து
    பெரியவர் + அந்தம் + இல்
    கரியவர் + அந்தணர்
    உரியவர் + அந்தரங்க

    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



    கரியவர் கருமை நிறம் கொண்டவரும் ,
    அந்தணர் கை தொழும் வேதியர்கள் கை கூப்பி வணங்கும்
    மால் அலங்காரர் பெருமை உடையவருமான அழகர் பிரான்
    அயன் முதலோர்க்கு பிரமன் முதலிய தேவர்களுக்கு
    அரிய வரம் தந்து அரிதான வரங்களைத் தந்து ,
    அருள் செய்து கருணை புரிந்து ,
    அவரைப் பெரியவர் அவர்களைப் பெருமை உடையவர்களாகவும் ,
    அந்தம் இல் வாழ்வினர் ஆக்கி முடிவற்ற வாழ்வு உடையராகவும் செய்து ,
    தம் பேர் அருளால் தமது பெரும் கருணையால்
    வையத்து உரியவர் பூமியில் , தமது பக்தர்களுடைய
    அந்தரங்கத் துயர் மனத் துன்பங்களை
    தீர்க்க உலாவுவரே நீக்குவதற்கு உலா வருவார்.
    --
    V.Sridhar



    Last edited by sridharv1946; 10-10-2013 at 09:02 PM.

  2. Dear Unregistered,Welcome!

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Powered byvBSocial.com and Block Facebook