Announcement

Collapse
No announcement yet.

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில்

    Click image for larger version

Name:	Sugava.jpg
Views:	1
Size:	49.9 KB
ID:	35302 Click image for larger version

Name:	Sugavaneswar.jpg
Views:	1
Size:	58.3 KB
ID:	35303


    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

    தலபெருமை:

    நவகிரகங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். இந்த கிரகங்களை வழிபடுவதனால் நல்ல வரனும், உத்தியோகமும் கை கூடும்.


    நவகிரஹக சக்தி மேல் தளத்தில் பல்லி,உடும்பு உருவங்கள் உள்ளன. பல்லி விழும் உபாதைகள் நிவர்த்தி பெற்று சுகம் பெறலாம் .

    தல வரலாறு:



    பிரம்மதேவன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடிகிறது என்ற ரகசியத்தை சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்தவர்களில், சிவநெறிகளில் சிறந்த சுகர் என்ற முனிவர் சரஸ்வதியிடம் போய் சொல்லிவிட்டார். கோபம் கொண்ட பிரம்மன் சுகர் முனிவரை கிளியாக்கி சாபம் கொடுத்துவிட்டு, பாபநாசப்பகுதியில்(இப்போதைய கோயில் பகுதி) வந்த சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபட்டுவந்தால் சாபம் நீங்கும் என்றும் கூறினார்.

    அதேபோல் வந்து எண்ணற்ற கிளிகளோடு தானும் ஒரு கிளிவடிவாக சுகர் முனிவர் சிவபெருமானை வழிபட்டு வரும் வேளையில் வேடன் ஒருவன் கிளிகளை விரட்டியடிக்க, அவை புற்றின் மீது பதுங்கின.கோபம் கொண்ட வேடன் புற்றை வெட்டினான்.கிளிகள் எல்லாம் செத்தன. அப்போது ராசகிளி (சுகர்)மட்டும் சுயம்பு மூர்த்தியின் முடிமீது சிறகை விரித்து காத்தது.வேடன் கிளியை வெட்ட ரத்தம் பீறிட்டது.கிளி இறக்க சுயம்புவின் தலையில் ரத்தம் பீறிட இறைவனை உணர்ந்த வேடன் தன் வாளால் தன்னைத்தானே வெட்டி மாய்த்துக்கொண்டான்.சிவனடி சேர்ந்ததால் கிளியுருவம் மறையப் பெற்ற சுகர் முனிவர், ""பெருமானே உன் திருப்பெயர் சுகவனேஸ்வரராக இருந்து இத்திருத்தலம் அருள் தர வேண்டும்,'' என்று கேட்டுக் கொள்ள அதுபடியே இறைவனும் அருளியதாக வரலாறு கூறுகிறது.


    http://temple.dinamalar.com/New.php?id=780

    Picture: FB
Working...
X