சிந்திக்க 28.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அது முற்றிலும் உண்மை. ஒருவனுக்கு நல்ல மனைவி அமைய அவன் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆவதும் பெண்-ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது பழமொழி. உண்மைதான். ஒருபெண்ணால் ஒருசாம்ராஜ்யத்தை உருவாக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அது மனைவிகளுக்கும் பொருந்தும். கணவன் உயிரைமீட்ட சாவித்திரி கதையும் தெரியும், கணவனுக்காக ஒரு நகரத்தையே எரித்த கண்ணகிகதையும் நமக்குத்தெரியும்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்-பின்னால் ஒரு பெண் என்றும் சொல்வார்கள். அவள் மனைவியாகத் தான் இருக்கவேண்டுமா ? தாயாகக்கூட இருக்கலாமே, என்று நீங்கள் கூறலாம். ஆம் தாயாக இருக்கலாம். ஆனால் தாய்என்பவள் தன் மகனின் 15வயதுமுதல், 25வயதுவரைதான் அவன் வெற்றிக்கு பாடு பட முடியும்.

பிறகு மனைவி அவன் வாழ்கையில் வந்து விடுவாள். மேலும் அந்த பத்தாண்டுகளில், தாய்பாசம் மகன் செய்யும் தவறுகளை அவள் கண்களிலிருந்து மறைத்துவிடும். காதலியாக இருக்கலாமே, என்றால் அவளே மனைவியாகவும் ஆனால் தொடரும் இல்லையென்றால் விழ லுக்கு இரைத்த நீர் போலாகிவிடும். அவள் நல்ல ஸ்நேகிதி யாகக்கூட இருக்கலாமே என்றால், ஸ்நேகிதமும் ஒரு வரம்பிற்கு உட்பட்டது. ஆகவே அவள் மனைவியாகவே மட்டும் இருக்கமுடியும்.

நல்லமனைவின் தர்மமென்ன ? மனைவியின் இலக்கணமென்ன ?. நல்ல மனைவி என்ப வள் ஒருதாயாக, கணவனுக்கு பிடித்த உணவைத்தானே சமைத்து, தன்கையாலேயே பரிமாறவேண்டும். நல்லமந்திரியாக இருந்து அவனுக்கு அவ்வப்போது நல்லவற்றை எடுத்துச்சொல்லவேண்டும். நல்ல குருவாக இருந்து அவன் தங்கள் ஸம்பிரதாயத்திலிருந்து வழுவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நல்ல சிநேகியாக இருந்து அவன் துன்பம் துடைக்க வேண்டும். அவள் வைத்யனாக இருந்து அவன் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். வேசியாகவும் இருந்து, தன் கணவனுக்கு உடல் சுகத்தை அளித்து அவன் மனம் வேறுபெண்களை நாடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றிர்கும்மேலாக தன்குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் இருக்கவேண்டும். கொலையும்செய்வாள் பத்தினி என்றொரு பழமொழியும் வழக்கத்திலுள்ளதே என்று குழம்ப வேண்டாம். அது அப்படியல்ல. ஒருபெண் திருமணத்திற்கு முன் தன் பிறந்தவீட்டார்மீது பாசமும், உறவும் அதிகம் வைத்திருப்பாள். திருமணமாகி கணவன் வீட்டிற்கு வந்துவிட்டபிறகு தேவைப்பட்டால், தன்பிறந்தவீட்டார் உறவைத் துண்டித்துக்கொள்ளக்கூட தயங்கமாட்டாள் என்பதாம். இப்போது புரிந்ததா !Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசிந்தியுங்கள்.courtesy:Poigaiadian