Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 078/100 தென் சோலை மலைக்கரசே ! இன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 078/100 தென் சோலை மலைக்கரசே ! இன்

    3. அழகர் அந்தாதி - 078/100 தென் சோலை மலைக்கரசே ! இன்றே உன் அடைக்கலமே !

    கொண்டமருந்தும் கடை வாய் வழி ஏகக் கோழை வந்து
    கண்டமருந்துயர் ஆம்போது உன் பாதம் கருது அறியேன்
    வண்டமருந்துளவோனே ! தென் சோலை மலைக்கரசே !
    அண்டமருந்தும் பிரானே ! இன்றே உன் அடைக்கலமே !

    பதவுரை : கொண்ட + மருந்தும்
    கண்டம் + அரும் + துயர்
    வண்டு + அமரும் + துளவோனே
    அண்டம் + அருந்தும்

    வண்டு அமரும் துளவோனே வண்டுகள் மொய்க்கும் துளஸி மாலை அணிந்தவனே !
    தென் சோலை மலைக்கு அரசே ! அழகிய திருமாலிருஞ்சோலைத் தலைவனே !
    அண்டம் அருந்தும் பிரானே அண்ட கோளங்களை உண்ணும் எம்பெருமானே !
    கொண்ட மருந்தும் வாயில் செலுத்தப்பட்ட உணவும்
    கடை வாய் வழி ஏகக் கடை வாயின் வழியாக வெளியே வழிய
    கோழை கண்டம் வந்து கபம் நெஞ்சில் அடைத்துக் கொண்டு
    ருந் துயர் ஆம் போது அரிய மரண வேதனை உண்டாகும் அந்த நேரத்தில்
    உன் பாதம் கருது அறியேன் உன் திருவடிகளை மயக்கத்தால் நினைக்க மாட்டேன்
    இன்றே உன் அடைக்கலமே ஆதலால் இப்போதே உன்னைச் சரண் அடைந்தேன்

    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 13-10-13, 21:07.
Working...
X