பழமொழி : கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்!


பழமொழி : கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்!

விளக்கம் : கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...

மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே!
பாய் செய்ய கோரை புல்லையும், கற்பூர புல்லையும் பயன்படுத்துவார்கள். இரண்டு வகை பாய்களும் பார்க்க ஒன்று போலவே இருக்கும். அவற்றில் வரும் வாசனையைக் கொண்டுதான் வேறுபாட்டை அறிய முடியும்.
கோரைப்புல்லுக்கு 'கழு' என்ற பெயரும் உண்டு. கோரைப்புற்களால் செய்யப்பட்ட பாயில் கற்பூர மணம் தெரியாது என்ற அர்த்தத்தில்தான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை?" என்கிறார்கள். இதுவே ('கழுதை தேய்ந்து கட்டெறும்பு' அனாது போல) "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று மாறிவிட்டது.Click image for larger version. 

Name:	kazuthai.jpg 
Views:	10 
Size:	46.7 KB 
ID:	1409


பந்திக்கு முந்தும்,படைக்கு பிந்தும்"


அந்த காலத்தில எல்லாம் போருக்கு வில் அம்பு தான் ஆயுதமா உபயோகபடுத்திகிட்டு இருந்தாங்க.வில்லில அம்பு புட்டி எப்படி அம்பு எய்துறதுன்னு நிறைய பேர் நம்ம DDல போட்ட மகாபாரத்மோ இல்ல இராமயணத்திலயோ பார்த்துர்க்கலாம்.இல்ல எல்லா சாமி படத்திலயும் வில் அம்ப use பண்ணியிருப்பத பார்த்து இருப்பிங்க.அப்படி வில்ல use பண்ணி அம்பு எய்திரப்போ நம்மளுடைய வலது கை பின்னாடி போகும்.ஆதே வலது கை சாப்பிடறப்போ முன்னாடி வரும்.அத தான் அவர் "பந்திக்கு முந்தும்,படைக்கு பிந்தும் வலக்கை அப்படின்னு எழுதினார்.


கல்ல கண்டா நாய காணாம்
நாய கண்டா கல்ல காணாம்...
கல்லால ஒரு நாய் சிலைய செஞ்சிருக்காங்க.அந்த நாய் சிலைய நாயா பார்க்கிறவங்களுக்கு நாயா தெரியும்.
கல்லா பார்க்கிறவங்களுக்கு கல்லா தெரியும் அப்படிங்கிறது தான் அர்த்தமே.வாழ்கையில நம்ம சந்திக்கிற எல்லா விஷயமும் அப்படித்தான்.நம்ம பார்க்கிற பார்வையில தான் எல்லா இருக்கு அப்படின்னு சொல்லறதுக்குதாங்க இந்த
பழமொழ.


ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.


விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல.ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு


விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.
நன்றி : தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture and other Links