உயிர்க்கொல்லி எயிட்ஸ் நோயின் அறிகுறிகள்:-

எய்ட்ஸ் (Acquired immune deficiency syndrome or acquired immuno deficiency syndrome) நோய் எச்.ஐ.வி (Human Immunodeficiency Virus) என்ற கிருமிகளால் உண்டாகிறது. இந்த நோய் உடலில் உள்ள நோய் தடுப்பாற்றல் அமைப்பை மாற்றி, தொற்று மற்றும் பிற நோய்களால் சீக்கிரமே பாதிக்கப்படும் நிலையை உண்டாக்குகிறது. மேலும் இது நோயின் தன்மையை சீக்கிரமே அதிகரித்து விடும்.

நோய்க்கிருமி பாதித்த ஒருவரின் உடற்பாய்பொருட்களில் (விந்து, பெண்ணுறுப்பு திரவங்கள், இரத்தம் மற்றும் தாய்ப்பால்) எச்.ஐ.வி-யை காணலாம். இந்த கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இரத்தத்தின் மூலமாகவும், உடல் உறவு கொள்வதன் மூலமாகவும் பரவும். மேலும் இந்த கிருமியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணால், குழந்தைக்கு கருவில் இருக்கும் போதோ அல்லது பிறக்கும் போதோ அல்லது தாய்ப்பால் ஊட்டும் போதோ இந்த நோய் பரவக்கூடும்.

எச்.ஐ.வி உடல் உறவு, வாய்வழிப் பாலுறவு, குதவழிப் பாலுறவு, இரத்தம் அளித்தல், தூய்மையற்ற ஊசி போன்ற பல வழிகளில் பரவுகிறது.

எச்.ஐ.வி இருப்பதற்கான அறிகுறிகள்:-

காய்ச்சல்


எச்.ஐ.வி. இருப்பதற்கான முதல் அறிகுறி லேசான காய்ச்சல். இது 102 டிகிரி வரை இருக்கும். காய்ச்சல் இருந்தால், அதனுடன் சேர்ந்து மயக்கம், வீங்கிய நிணநீர்ச் சுரப்பி மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகளும் தெரியும்.

சோர்வு


எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் தடுப்பாற்றல் அமைப்பு முற்றுகையிடப்பட்டுள்ளதால், அது உடலில் சோர்வு மற்றும் மந்த நிலையை ஏற்படுத்தும். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ஆரம்ப நிலையிலும் சரி, கடைசி கட்டத்திலும் சரி இந்த சோர்வு இருந்து கொண்டே தான் இருக்கும்.

காய்ச்சல் மற்றும் உடல் வலி/வீக்கம்

எச்.ஐ.வி. கிருமி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் காய்ச்சல், ஒற்றை உட்கருஅணுமிகைப்பு அல்லது வேறு சில வைரல் தொற்றுகள், கிரந்தி நோய் அல்லது கல்லீரல் வீக்கம் போலத் தான் இருக்கும். இது ஒன்னும் வியக்கத்தக்கது அல்ல: பல அறிகுறிகள் ஒரே மாதிரி தான் இருக்கும். அவைகளில் சில தான் மூட்டு வலி, தசை வலி மற்றும் நிணநீர்ச் சுரப்பி வீக்கம். உடம்பிலுள்ள நோய் தடுப்பாற்றல் அமைப்பின் ஒரு அங்கம் தான் நிணநீர் முடிச்சுகள். எனவே இதில் தொற்று ஏற்பட்டால், அது வீக்கம்/அழற்சியை ஏற்படுத்தும். அதலும் இது அக்குள், கவட்டை மற்றும் கழுத்து பகுதிகளில் தான் அதிகம் காணப்படும்.

தலைவலி மற்றும் தொண்டை எரிச்சல்


மற்ற அறிகுறிகளுடன், தொண்டை எரிச்சல் மற்றும் தலை வலியும், ARS வருவதற்கான அறிகுறியே. சமீப காலத்தில் உங்கள் உடம்பில் மேற்கூறிய அறிகுறிகள் அதிகம் தென்பட்டால், உடனே எச்.ஐ.வி சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதை உங்களுக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏனென்றால் எச்.ஐ.வி-யின் ஆரம்ப கட்டத்தில் தொற்றுத்தன்மை மிகவும் அதிகமாக இருக்கும்.

சரும அரிப்பு சரும சிராய்ப்புகள்

எச்.ஐ.வி.யின் ஆரம்ப கட்டத்திலோ அல்லது கடைசி கட்டத்திலோ ஏற்படும். இது கட்டிகளைப் போலவும் இருக்கும். இது பொதுவாக நடு அல்லது அடி உடம்பில் ஏற்படும்.

குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு


எச்.ஐ.வி. யின் ஆரம்ப கட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களில் 30% - 60% பேருக்கு குறுகிய கால குமட்டல்கள், வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்படும். இந்த அறிகுறிகள் ஆன்டி-ரெட்ரோவைரல் தெரபி செய்வதன் விளைவாக தென்படும். பிறகு தொற்றினாலும் ஏற்படும். பெரும்பாலும் இது தருணத் தொற்றினால் ஏற்படுவதே.

எடை குறைவு


உடல் எடை பெருமளவு குறைய ஆரம்பிக்கிறதா? அப்படியானால் உடம்பில் நோய் தடுப்பாற்றல் அமைப்பு செயலிழக்கிறது என்று அர்த்தம். மேலும் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை குறைந்து கொண்டே தான் போகும்.

வறட்சி இருமல்

வறட்டு இருமல் இருந்தால் ஏதோ தவறாக போவதற்கான முதல் அறிகுறி. எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த இருமல் நிற்காமல் வாரங்கள் கடந்து வளர்ந்து கொண்டே போகும்.

அதிகமாக வியர்த்தல்


எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இரவிலும், மற்ற நேரங்களிலும் அதிகமாக வியர்த்துக் கொட்டும்.

நகங்களில் மாற்றம்


எச்.ஐ.வி. யின் மற்றொரு அறிகுறி நகங்களின் மாற்றங்கள். நகங்கள் தடித்தோ அல்லது வளைந்து காணப்பட்டாலோ, நகங்கள் பிரியத் தொடங்கினாலோ அல்லது நகங்களின் மேல் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் கோடுகளை கண்டாலோ எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

வாய்ப்புண்

எச்.ஐ.வி-யின் கடைசி கட்டத்தில் ஒரு வகை பூஞ்சைத் தொற்றான வாய்வெண்புண்ணால் பாதிக்கப்படுவர். இது கேண்டிடா என்னும் ஈஸ்ட்டினால் வரும் வாய் தொற்று.

அறிவுத்திறன் குறைபாடு


அறிவுத்திறனில் ஏற்படும் பிரச்சனைகளும் எச்.ஐ.வி. யால் உண்டாகும் மன நோய்க்கான அறிகுறியே. இது எச்.ஐ.வி. யின் கடைசி கட்ட அறிகுறி. குழப்பங்களும், கவனம் செலுத்துவதில் சிக்கல்களும் ஏற்படும். மேலும் ஞாபக குறைபாடுகளும், அதிக கோபம் மற்றும் எரிச்சல் ஏற்படுத்தி, குணத்திலும் மாறுதல்கள் ஏற்படும். குறிப்பாக இது நம் இயக்கத்தையே மாற்றி விடும். உதாரணத்திற்கு, அருவருப்பாக நடப்பது, ஒருங்கிணைத்து நடக்கமால் இருப்பது மற்றும் எழுதும் திறன் கூட குறைந்து விடுவது.

பிறப்புறுப்பு புண்கள்


குளிர் புண்கள் மற்றும் இன உறுப்புகளில் ஏற்படும் புண்களும் ARS மற்றும் எச்.ஐ.வி-யின் கடைசி கட்ட அறிகுறிகள். தோல் அழற்சி ஏற்பட்டால் எச்.ஐ.வி வேகமாக வளருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் இன உறுப்புகளில் ஏற்படும் புண்களால் அல்சர் வரும். இதுவே உடல் உறவு கொள்ளும் போது எச்.ஐ.வி-யை மற்றொருவரின் உடம்பிற்குள் சுலபமாக பரவச் செய்யும். எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் தடுப்பாற்றல் அமைப்பின் வீரியம் குறைவாக இருப்பதால், இந்த அழற்சிகள் இன்னும் வேகமாக பரவும்.

கைக்கால் மரத்து போதல்


எச்.ஐ.வி-யின் கடைசி கட்டத்தில் கைகளும் கால்களும் மரத்து போய், ஒருவித சிலிர்ப்பையும் ஏற்படுத்தும். இதனை பெரிபெரல் நியூரோபதி என்று அழைப்பர். இது சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கும் ஏற்படும். இந்த நேரத்தில் தான் நரம்பு மண்டலம் பாதிப்படையும்.

முறையற்ற மாதவிடாய்

எச்.ஐ.வி உச்ச நிலையில் இருக்கும் போது, பெண்களுக்கு சீரான மாதவிடாய் ஏற்படாது. இதனால் அதிக அளவில் எடை குறைந்து, உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

Source:Ananthanarayanan Ramaswamy