Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 083/100 சோலை மலையானை வாழ்த்து என

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 083/100 சோலை மலையானை வாழ்த்து என

    3. அழகர் அந்தாதி - 083/100 சோலை மலையானை வாழ்த்து என் மட நெஞ்சமே !

    தொலைந்தானை ஓதும் தொலையானை , அன்னை சொல்லால் மகுடம்
    கலைந்தானை , ஞானக் கலையானை , ஆய்ச்சி கலைத் தொட்டிலோடு
    அலைந்தானை , பாலின் அலையானை , வாணன் கை அற்று விழ
    மலைந்தானை , சோலை மலையானை , வாழ்த்து என் மட நெஞ்சமே

    பதவுரை : தொலைந்து + ஆனை

    என் மட நெஞ்சமே அறியாமை உடைய என் மனமே !
    ஆனை தொலைந்து ஓதும் கஜேந்திரன் பலம் இழந்து , அழைத்த
    தொலையானை பழமை ஆனவனும் ,
    அன்னை சொல்லால் சிறிய தாயான கைகேயின் வார்த்தையால்
    மகுடம் கலைந்தானை பட்டாபிஷேகம் நடக்காமல் போனவனும் ,

    ஞானக் கலையானை சாஸ்திரங்களால் கொண்டாடப்படுபவனும் ,
    ஆய்ச்சி கலைத் தொட்டிலோடு இடைச்சியான யசோதையின் துணித் தொட்டிலில்
    அலைந்தானை ஆடியவனும் ,
    பாலின் அலையானை திருப்பாற்கடலில் வாழுபவனும் ,
    வாணன் கை அற்று விழபாணாசுரன் ஆயிரம் கைகள் வெட்டுண்டு விழும்படி
    மலைந்தானை போர் புரிந்தவனுமான
    சோலை மலையானை திருமாலிருஞ்சோலை அழகனை
    வாழ்த்து வாழ்த்துவாய் !

    V.Sridhar


  • #2
    Re: 3. அழகர் அந்தாதி - 083/100 சோலை மலையானை வாழ்த்து எ&a

    தொலைந்தானை ஓதும் தொலையானை , அன்னை சொல்லால் மகுடம்

    கலைந்தானை , ஞானக் கலையானை , ஆய்ச்சி கலைத் தொட்டிலோடு

    அலைந்தானை , பாலின் அலையானை , வாணன் கை அற்று விழ

    மலைந்தானை , சோலை மலையானை , வாழ்த்து என் மட நெஞ்சமே


    இச்செய்யுளின் அடிகளில்

    தொலைந்தானை , தொலையானை
    கலைந்தானை ,கலையானை
    அலைந்தானை ,அலையானை
    மலைந்தானை , மலையானை




    என்பவை உடன்பாடும் எதிர் மறையுமாய் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுவதாகத் தோன்றினாலும் பொருள் பார்க்கும்போது வேறு பொருள்பட்டு முரண் அழிவதால் "முரண் விளைந்தழிவணி" என்பர் . (வடமொழியில் விரோதாபாஸ அலங்காரம் )


    Last edited by sridharv1946; 16-10-13, 15:58.

    Comment

    Working...
    X