கேஸ் சிலிண்டர் பணம்

ஒரு சமையல் எரிவாயுவுக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை, சென்னையில் ரூ.930. இது இன்றைய நிலவரம் மட்டுமே. இதை நாம் ரூ.398க்கு பெற்று வருகிறோம். மீதமுள்ள ரூ.532ஐ அரசு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக வழங்குகிறது.இதெல்லாம் இந்த மாதம் வரைதான்.

அக்டோபர் மாதம் முதல் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் சிலிண்டரை வாங்க வேண்டும். அப்படியானால் அரசு தரும் மானியத் தொகை? அது நேரடியாக இனி மக்களுக்கே வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.ஆனால், நம் கையில் பணத்தை கொடுக்க மாட்டார்கள். பதிலாக வங்கிக் கணக்கில் சேர்ப்பார்கள். இதைப் பெற இரண்டு விஷயங்கள் அவசியம் தேவை. ஒன்று, ஆதார் எண். இரண்டு, வங்கிக் கணக்கு. இந்த இரண்டுமே யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ அவருக்கு நிச்சயம் இருக்க வேண்டும்.

அப்போதுதான் மானியத் தொகை வந்து சேரும்.இந்தத் திட்டம் அக்டோபர் ஒன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக அடுத்த மாதம் அரியலூர் மாவட்டத்திலும், நவம்பரில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், டிசம்பரில் கடலூர், பெரம்பலூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களிலும், ஜனவரி 2014ல் தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருகிறது.

சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், நீலகிரி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களுக்கு இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், கூடியவிரைவில் இந்த மாவட்டங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்துவிடும்.எனவே யார் பெயரில் எரிவாயு இணைப்பு இருக்கிறதோ அவர்கள் உடனடியாக வங்கிக் கணக்கையும், ஆதார் எண்ணையும் வாங்கிவிடுவது நல்லது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇதற்கு என்ன செய்ய வேண்டும்? சிம்பிள். ஆதார் எண்ணிற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்
தலைவர் அலுவலகம் அல்லது அருகிலிருக்கும் ஆதார் பதிவு மையங்களை தொடர்பு கொள்ளுங்கள். கூடுதல் சந்தேகங்களுக்கு 1800 300 1947 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் தேவையான விவரங்கள் கிடைக்கும்.ஆதார் எண், வங்கிக் கணக்கு இரண்டும் வைத்திருப்பவர்கள் இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும். ஒன்று வங்கிக்கு. மற்றது சிலிண்டர் விநியோகஸ்தருக்கு. வங்கிக்கான படிவங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளில் கிடைக்கும். விநியோகஸ்தருக்கான படிவத்தை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் எண் இல்லாதவர்கள் நேரடி மானியம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் வரை மானிய விலையில் சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம். இந்த மூன்று மாதங்களுக்குள் ஆதார் எண்ணை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் சந்தை விலைக்குத்தான் தொடர்ந்து வாங்க வேண்டி
இருக்கும்.

எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆதார் எண்ணை பெற்றுவிடுங்கள்.


Source:http://www.dinakaran.com/Citizen-journalist/cj-did-you-knowdetail.aspx?id=344&mymode=didyou