Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 085/100 அலங்காரன் மாற்றுவித்தா&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 085/100 அலங்காரன் மாற்றுவித்தா&

    3. அழகர் அந்தாதி - 085/100 அலங்காரன் மாற்றுவித்தான் என் மயக்கம் எல்லாம்

    தேற்றுவித்தால் புனல் தேற்றுவர் போல் திரு எட்டெழுத்தால்
    மாற்றுவித்தான் என் மயக்கம் எல்லாம் மண்ணும் விண்ணும் உய்யப்-
    போற்றுவித்தாரப் புயல் அலங்காரன் பொன் மேருவை போல்
    தோற்றுவித்தார் அணியும் சுந்தரத் திருத் தோள் அண்ணலே

    பதவுரை : தேற்று + வித்தால்
    போற்று + வித்தார + புயல்
    தோற்று + வித்தார்


    மண்ணும் விண்ணும் உய்ய மனிதர்களும் தேவர்களும் வாழ்வதற்காக
    போற்று வித்தாரப் புயல் வணங்கக்கூடிய பெரியவனும் , மேகம் போன்றவனும் ,
    பொன் மேருவை போல் தோற்று பொன் மயமான மேரு மலை போல் தோன்றும்
    வித்தார் அணியும் வண்டுகள் மொய்க்கும் மாலைகளை அணியும்
    சுந்தரத் திருத் தோள் அண்ணல் அழகிய தோள்களை உடைய பெரியோன் ஆகிய
    அலங்காரன் அழகர் பிரான்
    தேற்று வித்தால் தேற்றாங்கொட்டையைக் கொண்டு
    புனல் தேற்றுவர் போல் நீரைத் தெளிய வைப்பவர் போல்
    திரு எட்டெழுத்தால் அஷ்டாக்ஷர மகா மந்திரத்தால்
    என் மயக்கம் எல்லாம் என் மதி மயக்கத்தை எல்லாம்
    மாற்றுவித்தான் மாற்றித் தெளியச் செய்தான் !

    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 16-10-13, 15:55.
Working...
X