சொந்தங்களுக்குள் திருமணம் ரத்த அழிவு சோகைக்கு வழிவகுக்கும்.


ரத்த சோகை பற்றி கேள்விபட்டிருப்போம். ரத்த அழிவு சோகை பற்றித் தெரியுமா? மரபு வழிக்கோளாறால் வரக்கூடிய இந்நோய்க்கு 'தலசீமியா' என்று பெயர். நெருங்கிய உறவுக்குள் திருமணம் முடிப்பவர்களின் வாரிசுகளையே இது அதிகம் தாக்குகிறதாம்.

'தலசீமியா' பற்றி விரிவாகப் பேசுகிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி

ஆப்பிரிக்க ஆசிய வம்சாவளில வரக்கூடிய குழந்தைகள் தான் 'தலசீமியா' பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படறாங்க. சிகப்பு ரத்த அணுக்கள்ல ஹீமோகுளோபின்னு சொல்லப்படற ஒரு புரதம் இருக்கும். அது தான் ஆக்சிஜனை உடம்புக்குள்ள எல்லா இடங்களுக்கும் எடுத்துட்டுப் போகும். ஹீமோகுளோபினுக்குள் ஆல்ஃபா குளோபின், பீட்டா குளோபின்னு ரெண்டு இருக்கும்.

ஒட்டு மொத்த ஹீமோகுளோபின் அமைப்புல கோளாறு ஏற்பட்டா ரத்த சிவப்பு அணுக்கள் அழிக்கப்படும். அதன் விளைவாக ஒவ்வொரு செல்லுக்கும் போக வேண்டிய ஆக்சிஜன் தடைபடும். வயித்துல உள்ள கரு பிறந்த குழந்தை, வளர்ந்த பிள்ளைகள்னு எந்த வயசுலயும் இது பாதிக்கலாம்.

நோய்க்குக் காரணமான குறைபாடுள்ள மரபணு குழந்தைக்கு அதோட அம்மா அல்லது அப்பா அல்லது இரண்டு பேர்கிட்டருந்தும் போகுது. பிறந்த குழந்தையாக இருந்தால் வயிறு ஊதிப்போறது, கல்லீரலும், எலும்பு மஜ்ஜையும் வீங்கறது, தலை வீங்கறது, இதயம், சிறுநீரகத்தோட செயல் குறையறது, களைப்புனு பலவித அறிகுறிகள் இருக்கும். அம்மாவோட வயித்துல இருக்கும்போதே இந்தப் பிரச்சனை தீவிரமாகி குழந்தையை பாதிச்சா, குழந்தை இறந்தே பிறக்கலாம் அல்லது வளர்ச்சிக் குறைபாடுகளோட பிறக்கலாம்.

பிறக்கும் போதே மஞ்சள் காமாலை அதிகமாக இருக்கும் வேகமான மூச்சிறைப்பையும் பார்க்கலாம்,. மாசம் தவறாம ரத்தம் ஏத்தறது மட்டுந்தான் இதுக்கான ஒரோ தீர்வு. அப்படி ரத்தம் ஏத்தறப்ப, இரும்பு சத்து அதிகமாகி அதன் விளைவாக வேற பிரச்சனைகள் வராமல் இருக்க மாத்திரைகள் கொடுக்க வேண்டியிருக்கும். முதல் குழந்தைக்கு இந்த நோய் இருக்குன்னா, பெற்றோர் மரபணு கவுன்சலிங்கும், பரிசோதனையும் எடுத்துக்கணும். அடுத்த குழந்தைக்கும் வர வாய்ப்பிருக்காங்கிறதை தெரிஞ்சுக்கணும்.

அந்த ஆபத்து இருந்தா அடுத்த கர்ப்பத்தை கலைக்குறது தான் வழி. ஒரு வேளை இரண்டாவது குழந்தைக்கு நோய் ஆபத்து இல்லைனு தெரிஞ்சா அந்த குழந்தையோட ரத்தத்தை முதல் குழந்தைக்கு ஏத்தலாம். இரண்டாவது குழந்தையின் எலும்பு மஜ்ஜையை முதல் குழந்தைக்கு செலுத்தியும் குணமாக்கலாம். ஆனால் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறதைத் தவிர்க்க முடியாது என்கிற டாக்டர் மகேஸ்வரி நெருங்கிய உறவுக்குள் மனம் முடிப்பதைத் தவிர்க்கச் சொல்லி அழுத்தமாக அறிவுறுத்துகிறார்கள்..

நெருங்கிய உறவுக்குள் மணம் முடிப்பதால் குழந்தைகள் பிறப்பதில் இத்தனை பிரச்சனைகள் ஏற்படும் என்பதை அறிந்த பின்பும் உறவுக்குள் திருமணம் முடிப்பதை கண்டிப்பாக தவிக்கவேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Source:http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2183&cat=500