Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 088/100 பதம் காணப் பதறுகின்றேன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 088/100 பதம் காணப் பதறுகின்றேன்

    3. அழகர் அந்தாதி - 088/100 பதம் காணப் பதறுகின்றேன் ! மா மலைக் கொற்றவனே !

    நம்பிநின்றேன் நின் சரணாரவிந்தத்தை ; நல் நெஞ்சு என்னும்
    செம்பிநின்றே பொறித்தேன் , உனக்கு ஆள் என்று ; தெய்வக் குழாம்
    பம்பிநின்றேசு எறிக்கும் பதம் காணப் பதறுகின்றேன்
    கொம்பிநின்றேன் சொரியும் சோலை மா மலைக் கொற்றவனே !

    பதவுரை : நம்பி + நின்றேன்
    செம்பில் + இன்றே
    பம்பி + நின் + தேசு
    கொம்பில் + இன் + தேன்

    கொம்பில் இன் தேன் சொரியும் பூங்கொம்புகளினின்று இனிமையான தேன் பெருகும்
    சோலை மா மலைக் கொற்றவனே ! திரு மாலிருஞ்சோலைத் தலைவனே !
    நின் சரணாரவிந்தத்தை நினது திருவடித் தாமரையையே
    நம்பி நின்றேன் கதியாக நம்பி நின்றேன்
    உனக்கு ஆள் என்று உனக்கு நான் அடிமை என்று
    நல் நெஞ்சு என்னும்செம்பில் எனது நல்ல மனம் ஆகிய செப்பு ஏட்டில்
    இன்றே பொறித்தேன் இன்றைக்கே எழுதி வைத்துக் கொண்டேன்
    தெய்வக் குழாம் பம்பி நித்ய சூரிகளுடைய கூட்டம் நெருங்கி
    நின் தேசு எறிக்கும் பதம் நினது ஒளி வீசும் பரம பதத்தை
    காணப் பதறுகின்றேன் அடைவதற்கு விரைகின்றேன்

    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 17-10-13, 12:26.

  • #2
    Re: 3. அழகர் அந்தாதி - 088/100 பதம் காணப் பதறுகின்றேன&#3

    ஸார் தாங்கள் தமிழ் புலவரா அல்லது ஓய்வுபெற்ற தமிழாசிரியரா? தங்கள் புலமை கண்டு மகிழ்கிறேன்

    Comment


    • #3
      Re: 3. அழகர் அந்தாதி - 088/100 பதம் காணப் பதறுகின்றேன&am

      அடியேன் தமிழ்ப் புலவனும் அல்ல
      ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியனும் அல்ல.
      புலமையும் கிடையாது.
      தமிழனே அல்ல என்று இக்காலத்தில் ஒதுக்கப்படும் அந்தணர் குலத்தில் பிறந்தவன் .
      பழங்காலத்தில் நம் அந்தணர்கள் வளர்த்த தமிழைப் படிக்கும்போது அடியேனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கவேண்டும் என்று எழுதி வருகிறேன் .


      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      Comment

      Working...
      X