Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 089/100 இராவணனையும் இரா வணனையும&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 089/100 இராவணனையும் இரா வணனையும&

    3. அழகர் அந்தாதி - 089/100 இராவணனும் இரா வணனும் இரா வணம் செய்தவனே !

    கொற்றவிராவணன் பொன் முடி வீழக் கொடுங்கண் துஞ்சல்
    உற்றவிராவணன் மாள எய்தோன் ஒண் பரதனுக்குச்-
    சொற்றவிராவணன் மாலிருஞ்சோலை தொழுது வினை
    முற்றவிராவணனற்றமிழ் மாலை மொழிந்தனனே

    பதவுரை : கொற்ற + இராவணன்
    உற்ற + இரா + வணன் (கும்ப கர்ணன்)
    சொல் + தவிரா + அணன் (ராமன்)
    முற்ற + இரா + வணம்

    கொற்ற இராவணன் வெற்றியை உடைய இராவணனது
    பொன் முடி வீழ பொன் மயமான முடிகள் கீழே விழும்படியும் ,
    கொடுங்கண் துஞ்சல் உற்ற பயங்கரமான கண்களை மூடி உறங்கும்
    இரா வணன் மாள எய்தோன் இருள் நிறக் கும்பகர்ணன் இறக்கும்படியும் அம்பு எய்தவனும்
    ஒண் பரதனுக்குச் நற்குணம் உடைய பரதனுக்கு
    சொல் தவிரா அணன் சொல் தவறாதபடி மீண்டும் வந்த அண்ணனுமான
    மாலிருஞ்சோலை தொழுது அழகர் பிரானது சோலை மலையைத் தொழுது ,
    வினை முற்ற இரா வணம் என் கருமம் முழுவதும் இராதபடி
    நற்றமிழ் மாலை மொழிந்தனனே சிறந்த தமிழ்ப் பாமாலையைச் சொன்னேன்

    --

    V.Sridhar

    Last edited by sridharv1946; 17-10-13, 13:15.

  • #2
    Re: 3. அழகர் அந்தாதி - 089/100 இராவணனையும் இரா வணனையு&amp

    இராவணனும் , இரா வணனும் (கும்பகர்ணன்) இரா வணம் (இல்லாமல்) செய்த சொல் தவிரா அணன் (ராமன்) நம் வினை இரா வணம் செய்வான்
    --

    Comment


    • #3
      Re: 3. அழகர் அந்தாதி - 089/100 இராவணனையும் இரா வணனையு&#29

      ந்ன்று ந்ன்று பதம் பிரிக்கும் வார்த்தை விளையாட்டு

      Comment


      • #4
        Re: 3. அழகர் அந்தாதி - 089/100 இராவணனையும் இரா வணனையு&amp

        ,பாராட்டுகள் போய்ச் சேர வேண்டிய இடம்:

        ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திவ்ய கவி எனப் போற்றப்பட்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சுவாமி அவர்கள் ஆவார்கள்


        அடியேன் பார்த்துப் படித்துப் பகிர்ந்து அளித்த ஒரு சிறு கரண்டியே !




        தங்களுக்கு மிக்க நன்றி

        Comment

        Working...
        X