3. அழகர் அந்தாதி - 091/100 அழகா ! உயிர் விடும் காலம் என்னைக் காத்து அருளே !

காலமலைக்கும் புவனங்களைக் கரந்தாய் ! உதிரம்
காலமலைக்குமைத்தாய் ! அழகா ! கமலத்துப் பஞ்சார்
காலமலைக்கும் புவிக்கும் அன்பா ! உயிர் காயம் விடும்
காலமலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து என்னைக் காத்து அருளே !

பதவுரை : கால் + அம் + அலைக்கும்
கால + மலை + குமைத்தாய்
கால் + அமலைக்கும்
காலம் + மலைக்கும்

கால் அம் அலைக்கும் ஊழிக் காற்றால் அலை கொந்தளிக்கும்
புவனங்களை கரந்தாய் உலகங்களை உன் வயிற்றில் ஒளித்து வைத்தவனே !உதிரம் கால மலைக் குமைத்தாய் இரத்தம் சிந்த , மல்லர்களை அழித்தவனே !
கமலத்து தாமரையில் இருக்கும்
பஞ்சு ஆர் கால் செம்பஞ்சு குழம்பு தடவிய திருவடிகளை உடைய
அமலைக்கும் புவிக்கும் அன்பா ! ஸ்ரீதேவிக்கும் பூமி தேவிக்கும் அன்புள்ள கணவனே !
உயிர் காயம் விடும் காலம் என் உயிர் இந்த உடலை விட்டு நீங்கும் காலத்தில்
மலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து போரிட வரும் யமனைச் சினந்து
என்னைக் காத்து அருளே ! என் உயிரை நற்கதியில் சேர்த்துப் பாதுகாப்பாய் !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
--

V.Sridhar